மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத்தலைவர்களில் ஒருவராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதற்கான நியமனக் கடிதம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் அலிசாஹிர் மௌலானா அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக அறியக்கூடியதாக உள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவர்களாக இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், பிரதி அமைச்சர் அமீர் அலி, தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் ஆகியோர் செயற்பட்டு வரும் நிலையிலேயே குறித்த இணைத்தலைமை பதவிக்கு அலிசாஹிர் மெளலானா அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM