Web
Analytics
மன்சூர் எம்.பி.யின் வேண்டுகோளுக்கிணங்க சம்மாந்துறையில் காணிக் கச்சேரி நடமாடும் சேவை - Sri Lanka Muslim Congress

சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மக்கள் இதுவரையும் காணி உறுதிப்பத்திரங்கள் கிடைக்கப்பெறாவர்கள் மற்றும் காணிப் பிரச்சினைகள் உள்ளவர்களுக்கான கிழக்கு மாகாண காணி நிர்வாகத் திணைக்களத்தின் காணிக் கச்சேரி நடமாடும் சேவை திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூரின் வேண்டுகோளுக்கிணங்க கடந்த வியாழக்கிழமை சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.


கிழக்கு மாகாண காணி நிருவாக திணைக்களம் மற்றும் சம்மாந்துறை பிரதேச செயலகம் என்பன இணைந்து இந்நடமாடும் சேவையை முன்னெடுத்தன. இந்நடமாடும் நடமாடும் சேவை சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எம்.முகம்மட் ஹனீபா தலைமையில் இடம்பெற்றது.


இதில் கிழக்கு மாகாண காணி நிர்வாகத் திணைக்களத்தின் ஆணையாளர் டி.டி.அநுர தர்மதாஸ, உதவி காணி ஆணையாளர் ஜீ.ரவிராஜன், அம்பாறை மாவட்ட காணி உத்தியோகத்தர் கே.எல். முஸம்மில், உதவிப் பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசீக், பிரதேச செயலக காணி உத்தியோகத்தர் எம்.ஏ.எம்.றாபி, பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் சட்டத்தரணி எம்.எம்.சகுபீர், மாவட்ட குடியேற்ற உத்தியோகத்தர் சட்டத்தரணி ஏ.எச்.எம்.கிபாயத்துல்லா, கிழக்கு மாகாண காணி நிர்வாகத் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட 51 கிராம சேவையாளர் பிரிவிற்குட்பட்ட சுமார் 800ற்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் கலந்து கொண்டு தங்களது காணிப் பிணக்குகள் சம்பந்தமாக கிழக்கு மாகாண காணி நிர்வாகத் திணைக்களத்தின் ஆணையாளரிடம் நடமாடும் சேவையின் போது முறையிட்டனர். இதன்போது காணி ஆணையாளர் நாயகம் மற்றும் அதன் அதிகாரிகள் பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்டதுடன் இந்த காணிப்பிரச்சினையை தீர்த்து வைப்பதற்கான விண்ணப்பப் படிவமொன்று வழங்கப்பட்டதுடன், காணி உரிமையாளர்களின் எல்லைப் பிரச்சினைகள், அனுமதிப் பத்திரம் வழங்கப்படாமைக்கான காரணங்கள் பற்றிய 300ற்கும் மேற்பட்டோரின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM