தன்னலம் கருதாமால் பொதுமக்களின் தேவை அறிந்து சேவையாற்றி மருத்துவ மேம்பாட்டிற்கு முதுகெலும்பாகத் திகழும் அனைத்துத் தாதியர்களுக்கும் அன்னைக்கு அடுத்தபடியாக அன்புக்கும், அரவணைப்புக்கு எடுத்துக் காட்டாக விளங்குகின்றனர். தாதியர்கள் அனைவரும் இந்தத் தாதியர் தொழிலின் புனிதத் தன்மையை அறிந்து சேவையாற்ற முன்வர வேண்டும். என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் சர்வதேச தாதியர் தினத்தை முன்னிட்டு வெளியிட்ட வாழ்த்துச் செய்தியிலே இவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டு உள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் –

”சுகாதார சேவை மனித உரிமையாகும்” என்ற கருப்பொருளின் இன்று சர்வதேச தாதியர் தினம் கொண்டாப்படுகின்றது. இத்தினத்தில் அனைத்து தாதியர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். 
உலகம் முழுவதும் உள்ள தாதியர்களின் அர்ப்பணிப்பையும், தியாகத்தையும் அங்கீகரிக்கும் வண்ணம் ஒவ்வொரு ஆண்டும் மே 12 இன்று சர்வதேச தாதியர் தினம் கொண்டாடப்படுகின்றது.


தாதியர் தொழிலை நிபுணத்துவம் மிக்க தொழிலாக மாற்ற வேண்டுமென் பதில் குறியாக செயற்பட்டு வந்த நைட்டிங்கேள் அம்மையார் பலத்த போராட்டங்கள் மூலம் அதில் வெற்றிகண்டார். விளக்கேந்திய சீமாட்டி என புகழ்பெற்ற நைட்டிங்கேள் அம்மையார் தனது வாழ்க்கையை தாதியர் சேவைக்காகவே அர்ப்பணித்தார்
தாதியர் தொழிலுக்கு புத்துயிர் அளித்த இந்த மனிதருள் மாணிக்கமாக விளங்கும் நைட்டிங்கேள் அம்மையாரை கெளரவிக்கும் முகமாகவே தாதியர் தினம் உலகெங்கிலும் நினைவு கூரப்படு கின்றது.


தாதியர் தொழில் என்பது ஒரு புனிதமான தொழில் மட்டுமின்றி அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்படக்கூடிய ஒரு தொழிலும் ஆகும். தாதிகள் சமூகத்திற்கு ஆற்றும் பங்களிப்பும் அவர்களின் சேவைத் தியாகங்களையும் சிறப்பாக நினைவுகூர இத்தினம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.


இன்றைய மனித சமூகத்துக்கான தாதிமாரின் சேவையை இலகுவாக மதிப்பிட்டு விட முடியாது. இத்தினத்தில் உலகமெங்கிலும் சேவைபுரியும் தாதியர்களின் மகத்தான பணிகளையும் கண்ணியப்படுத்தி கௌரவிப்பதானது அவர்களுக்கு உலக மக்கள் வழங்கும் அதிஉயர் அங்கீகாரமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM