Web
Analytics
மருதமுனை ஈஸ்டன் யூத் விளையாட்டுக்கழகம் நடாத்திய உதைபந்து சுற்றுப்போட்டியில் மருதமுனை ஒலிம்பிக் சம்பியன் - Sri Lanka Muslim Congress

மருதமுனை ஈஸ்டன் யூத் விளையாட்டுக்கழகம் நடாத்திய 16அணிகள் பங்கேற்ற மின்னொளி உதைபந்து சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டி நேற்று (24) மருதமுனை மசூர் மௌலானா விளையாட்டரங்கில் இடம்பெற்றது.

இறுதிப்போட்டியில் களமாடிய ஏறாவூர் லக்கி ஸ்டார் விளையாட்டுக்கழகத்தை மருதமுனை ஒலிம்பிக் விளையாட்டு கழகம் 3: 2 என்ற கோல் கணக்கில் வெற்றி கொண்டது.

குறித்த நிகழ்வில் பிரதியமைச்சர்களான ஹரீஸ் மற்றும் அலி சாஹிர் மௌலானா ,கல்முனை மாநகர மேயர் சட்டத்தரணி ரக்கீப், பிரதி மேயர் காத்த முத்து கணேஷ், ஏறாவூர் நகர சபையின் உறுப்பினர்களான நழீம் ஹாஜி , ரியாழ் ஹாஜி (லூலூ) மற்றும் உதைபந்தாட்ட சம்மேளன பிரதிநிதிகள் , அனுசரனையாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வாழ்த்துக்கள் லக்கி ஸ்டார் மற்றும் சம்பியனாக தெரிவான ஒலிம்பிக் அணியினருக்கு….

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM