மாகும்பர, பன்னல, குளியாப்பட்டிய ஒருங்கிணைக்கப்பட்ட உத்தேச நீர் வழங்கும் கருத்திட்ட நடவடிக்கைகளை விரைவுபடுத்துவது தொடர்பாக ஆராயும் கலந்துரையாடலொன்று அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பாவின் பங்குபற்றுதலுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் செய்வாக்கிழமை (28) பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெற்றது.

ஓரு லட்சத்தி இருபத்தையாயிரதிற்கும் அதிகமான பாவனையாளர்களின் நலன் கருதி அமைக்கப்பவுள்ள உத்தேச நீர் வழங்கல் திட்டத்திற்காக நூறு மில்லியன் அமெரிக்க டொலர் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாஓயாவை குறுக்கருத்து மதிலொன்றைக் கட்டுவதன் மூலம் இத்திட்டத்திற்கான நீர் மூலம் அமைக்கபடவுள்ளது. மேலும் இக்கருத்திட்ட பூர்த்தியடைந்ததும் நாளொன்ருக்கு 25 ஆயிரம் கனமீற்றர் நீரை உற்பத்தி செய்யக்கூடியதாகவும் அமையும்.

இக்கலந்துரையாடலில் அமைச்சின் செயலாளர் சரத் சந்திரசிறி விதான, மேலதிகச் செயலாளர் எல்.மங்கலிகா மற்றும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் கே.ஏ.அன்சார் உட்பட உயரதிகாரிகள் பலர் இதில் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM