தொழிற் சந்தைக்கு ஏற்ற வகையில் பட்டதாரிகளை உருவாக்கும் கல்வித் திட்டம் நம்மிடம் இல்லை என்பது பாரிய குறைபாடாகக் காணப்படுகின்றது. இதனால், பல்கலைக்கழங்களுக்குச் சென்று பட்டதாரிகளாக வெளியேறும் பலர், தொழில் சந்தையிலுள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கான தகைமைகளை கொண்டவர்களாக இல்லை என்பது, கசப்பான உண்மையாகும். என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் தெரிவித்தார்.
சம்மாந்துறை பட்டதாரிகள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சம்மாந்துறை பிரதேசத்தில் 2016, 2017ஆம் கல்வியாண்டிற்காக தெரிவு செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை சம்மாந்துறை தாருஸ்ஸலாம் மகாவித்தியத்தில் பெற்றது அதில் பிரதம அதிதியாக கலந்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையிலே – அதற்காகத்தான் அரசாங்கம் கல்விக் கொள்கையிலே மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கின்றது. கல்வி கற்கும்போது பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களும் கல்வியை ஒரு குறிக்கோளுடன் கற்க வேண்டும். வேலைவாய்ப்புத் துறையில் தற்போது கலைப் பட்டதாரிகளுக்கு இருக்கின்ற கேள்வி மிகவும் குறைவானது.

எந்தவொரு நாட்டிலும் அரசாங்கத்தால் அனைத்துப் பட்டதாரிகளுக்கும் வேலை வாய்ப்பினை வழங்கிவிட முடியாது. எனவே, இலகுவில் தொழில் பெற்றுக் கொள்ளக் கூடிய உயர்கல்வியை மாணவர்கள் தெரிவு செய்து கொள்ள வேண்டும்.
இந்நிகழ்வில் நீதி அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.மன்சூர், தென்கிழக்குப் பல்கலைக்கழத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர்களான சல்பியா ஜலீல், ஐனூல் ஜாரியா, நீர்ப்பானத்திணைக்களத்தின் பொறியியலாளர் எம்.நவாஸ், பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் சட்டத்தரணி எம்.எம்.சகுபீர், சம்மாந்துறை தாருஸ்ஸலாம் மகாவித்தியத்தில் அதிபர் எம்.எம்.அமீர் பல்கலைக்கழக மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM