Web
Analytics
மாமனிதர் மர்ஹூம் அஷ்ரப் அவர்களுக்காக துவாச் செய்தால் போதுமா ? !!! - Sri Lanka Muslim Congress

தலைவர் அஷ்ரப் மரணித்த அல்லது கொல்லப்பட்ட தினம் வந்தால் துவாச் செய்கிறோம், துவாச் செய்யச் சொல்கிறோம். அதைத்தான் அன்னார் மறைந்த,அண்மைய 18 வது வருடாந்த நிகழ்விலும் சொன்னோம், செய்தோம்.

தலைவர் அஷ்ரப் அவர்களின் இலட்சியங்களையும், கொள்கைகளையும் புறம் தள்ளிவிட்டு, அல்லது அவரது இலட்சியப் பாதையான “சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்” ஐ நிராகரித்துவிட்டு அன்னாருக்காக பிராத்திப்பதில் நியாயமோ, தர்மமோ இல்லை.

தமது ஆலோசனைகள் சட்டமாக்கப்பட வேண்டுமென அடம்பிடித்தவர்களும், எப்படியாயினும் தாமும் அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சராக வேண்டுமென விரும்பியவர்களும் தலைமையோடு முரண்பட்டு ஈற்றில் புதிய கட்சிகளை உருவாக்கிக்கொண்டு வெளியேறிவிட்டார்கள். அவர்களின் கட்சிப்பெயர்களில் முஸ்லிம்களின் அடையாளங்களே கிடையாது. முஸ்லிம் கட்சிகளாக அடையாளப்படுத்த அவர்களுக்கு மன தைரியமும் கிடையாது. அவர்களும் முஸ்லிமென்பதால் அக்கட்சிகளை முஸ்லிம் கட்சிகளாகவே ஒருசாரார் நம்புகின்றனர்.

சிறு சிறு காரணங்களுக்காக அல்லது எதிர்பார்ப்புக்கள் உடனே நிறைவேறவில்லை என்பதற்காக பழி தீர்க்கும் எண்ணத்தில் அக்கட்சிகளை மாற்று முகாம்களாக நம்பி அடைக்கலம் புகுந்த நிகழ்வுகள் தாராளம். அவ்வாறே சென்று தாய்வீட்டுக்குத் திரும்பியவர்களும் ஏராளம்.

எது எவ்வாறாக இருந்தாலும் அல்லது யார் என்ன சொன்னாலும், இலங்கை முஸ்லிம்களின் உலகறிந்த கட்சியென்றால் அது சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்தான். அவ்வாறே இலங்கை முஸ்லிம்களின் உலகறிந்த தலைவனென்றால் அது “ றவூப் ஹக்கீம்”தான்.

யார் என்ன சொன்னாலும், எமது இருப்பு, உரிமை விடயங்களில் எந்த விட்டுக்கொடுப்பும் இல்லாமல் நேர்மையாக போராடும் தலைமையாகவே எமது தலைமைத்துவம் காணப்படுகின்றது. ஆட்சியில் பங்காளிகளாக இருந்தாலும், போராடியே எமதுரிமைகளைப் பெறவேண்டியுள்ளது.

பெரும்பான்மை கட்சியோடு தேர்தல் கேட்டோம் அல்லது அமைச்சுப் பொறுப்புக்களோடு ஆட்சியிலுள்ளோம் என்பதற்காக அசைந்துபோகின்ற அல்லது எமது சமூகத்தை பாதிக்கும் விடயங்களில் அவர்களோடு இசைந்துபோகின்ற தலைமையாக, எமது தலைமை காணப்படாமை எம்மை உற்சாகப்படுத்துகின்ற விடயமாகும். மேலும் அவரது கரத்தை பலப்படுத்துவதற்கும், எமது கட்சியை மேலும் கட்டியெளுப்புவதற்குமான தேவையை உணரச் செய்துள்ளது.

நல்லாட்சிக்குள்ளும் கர்ச்ஜிக்கும் இனவாதிகளும், கடும் போக்குவாதிகளும் காணப்படும் சூழலை உற்று நோக்குகின்றபோது, எமது கட்சியினது தேவையும் தனித்துவமான போராட்டமும் இன்றியமையாத ஒன்றாகவே காணப்படுகின்றது.

எமது சமூகத்துக்குள் தோன்றியுள்ள இதர கட்சிகளால் சவாலுக்குள்ளாகியுள்ள எமது பேரம் பேசும் சக்திக்கு, மேலுமொரு சவாலாக பெரும்பான்மை கட்சிகளின் ஊடுருவல் காணப்படுகின்றது.

மேலும் மாமூல் அரசியலுக்குள்
எம்மை தள்ளி தனித்துவமான எமது அரசியலுக்கு ஆப்பு வைக்கும் வகையிலான அனைத்து காய் நகர்த்தல்களையும், இரண்டு பிரதான பெரும்பான்மை கட்சிகளும் மேற்கொள்ளத் துவங்கியுள்ளன. அதற்கு எமது சமூகத்தில் காணப்படும் கோடாரிக் காம்புகளும், அரச பணம் மற்றும் இயந்திரங்களும் பாவிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றமை நிதர்சனமாகும்.

இவ்வாறு,எமது தனித்துவ அரசியல் போராட்டத்திற்கும் முஸ்லிம்களின் இருப்புக்கும் சவாலாக எழுந்துள்ள சதிகளையும், துரோகத்தனங்களையும் முறியடிக்க, சகல பேதங்களையும் மறந்து ஒன்றுபடவேண்டியது காலத்தின் கட்டாயமாகும். அவ்வாறே எமது கட்சிக்கு வலுச் சேர்க்க இளைஞர்களின் படையெடுப்பும் இன்றியமையாதவொன்றாகும்.

“பேதங்கள் மறந்தெம்மைச் சரிசெய்வோம்,
சுயம் எம்மைச் சிதைக்காமல் வழி செய்வோம்.

அறம் எங்கள் வழியென்ற திடம்கொள்வோம்,
அதைச்சொல்லும் எம்கட்சிக்கு உரமிடுவோம்.

எதிர்காலம் எமதென்ற உணர்வோடு 
இளைஞர்காள் புறப்படுங்கள் திடத்தோடு.

மரமெங்கள் வரமென்ற கோசத்தை 
தினம் சொல்லி ஒழித்திடுவோம் எம் தோசத்தை.”

“போராளிகளே புறப்படுங்கள்”

-எம்.ஐ.எம்.மன்சூர்,பா.உ,
அமைப்பாளர்,ஸ்ரீ.மு.கா.
சம்மாந்துறை தொகுதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM