மாவடிப்பள்ளி மக்களின் சுகாதார நலனை கருத்திற்கொண்டு சுமார் 40 மில்லியன் ரூபாயில் புணர்நிர்மானம் செய்யபடவுள்ள மாவடிப்பள்ளி வைத்தியசாலைக்கான முதற்கட்ட நிதி ஊரின் முதல்வர் கெளரவ MNM.றணீஸ் அவர்களிடம் பிரதி சுகாதார போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் மாண்புமிகு பைசால் காசிம் அவர்களினால் கையளிக்கப்பட்டது.

முதற்கட்ட நிதியாக 10 மில்லியன் ரூபாவானது 12.05.2018 அன்று, கையளிக்கும் நிகழ்வில் ஊரின் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு பிரதி அமைச்சரின் சேவைக்கு தங்களின் நன்றிகளை மிக உவகையுடன் தெரிவித்திருந்தனர்.

அத்துடன் இவ்வைத்தியசாலைக்கான அபிவிருத்தியானது பிரதி அமைச்சரின் தேர்தல் கால வாக்குறுதியில் ஒன்றாக காணப்பட்டதுடன், 
அவ்வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு ஒரு வாரகாலத்திற்குள் எடுக்கப்பட்ட முயற்சியின் பலனே இது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM