Web
Analytics
மீத்தொட்டமுல்லை அனர்த்தத்திற்குள்ளான பாடசாலைப் பிள்ளைகளுக்குப் புலமைப்பரிசில் - Sri Lanka Muslim Congress

மீத்தொட்டமுல்லை குப்பைமேடு சரிந்ததில் அனர்த்தத்திற்குள்ளான பாடசாலைப் பிள்ளைகளுக்குப் புலமைப்பரிசில் வழங்கும் ‘மெத்சரண’ புலமைப்பரிசில் நிகழ்ச்சித் திட்டம் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (16) முற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றபோது, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், நகர திட்டமிடல் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் பிரதான உரையை நிகழ்த்தினார்.

‘பிள்ளைகளைப் பாதுகாப்போம்’ தேசிய நிகழ்ச்சித் திட்டத்திற்கு உதவியாக நகர, திட்டமிடல் நீர்வழங்கல் அமைச்சு, தேசிய சேமிப்பு வங்கி மற்றும் AIA லங்கா காப்புறுதி நிறுவனத்தின் அனுசரணையில் இப்புலமைப்பரிசில் நிகழ்ச்சித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

18 வயதுக்குக் குறைந்த பிள்ளைகளுக்கு 25 ஆயிரம் ரூபா வீதம் 107 புலமைப்பரிசில்கள் இதன்போது வழங்கப்பட்டன. 10 பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில்களை வழங்கிவைத்து ஜனாதிபதி அவர்கள், இந்நிகழ்ச்சித் திட்டத்தை ஆரம்பித்துவைத்தார்.

இந்நிகழ்வில் நகர திட்டமிடல் நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணாந்துப்புள்ளே, அமைச்சின் செயலாளர் சரத் சந்திரசிரி விதான, தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபையின் தலைவர் கே.ஏ. அன்ஸார், பிரதித் தலைவர் ஷபீக் ரஜாப்தீன் ஆகியோர் உட்பட உயரதிகாரிகள் பலரும், பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்களும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM