Web
Analytics
மீராவோடை பிரதேச வைத்தியசாலை அபிவிருத்தி குறித்து கலந்துரையாடல் - Sri Lanka Muslim Congress

ஓட்டமாவடி மீராவோடை பிரதேச வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினரின் வேண்டுகோளின் பேரில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் நேற்று (3) அங்கு விஜயம் மேற்கொண்டார்.

இதன்போது வைத்திய பொறுப்பதிகாரி எச்.எம். முஸ்தபாவிடம் அங்குள்ள குறைகள் தொடர்பில் அமைச்சர் கேட்டறிந்தோடு, எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இவ்வைத்தியசாலைக்கு பிரதி அமைச்சர் பைஸல் காஸிமினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ஒரு கோடி ரூபா நிதிக்கு மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்திகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.

இதில் பிரதியமைச்சர் அலிஸாஹிர் மௌலானா, அமைச்சரின் இணைப்புச் செயலாளர் யூ.எல்.என்.எம். முபீன், பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM