கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அட்டாளைச்சேனை அமைப்பாளருமான ஏ.எல்.முஹம்மட் நஸீர் தலைமையில் கட்சியின் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட குழுவினர் கடந்த பலநாட்களாக அட்டாளைச்சேனையின் பல்வேறு பிரதேசங்களில் மக்கள் சந்திப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில் இதுவரை அறபா வட்டாரம், இக்ராஃ வட்டாரம், புறத்தேட்ட வட்டாரம், ஜூம்ஆ பள்ளி வட்டாரம் என அந்தந்த வட்டார வேட்பாளர்களை ஆதரித்து மக்கள் சந்திப்புகளில் ஈடுபட்டு வருகின்றார்.
இந்நிகழ்வுகளில் மத்தியகுழு பிரமுகர்கள், பிரதேச கட்சி முக்கியஸ்தர்கள், போராளிகள், இளைஞர்கள் பலரும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.