கிழக்கு மாகான முன்னாள் சுகாதார அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை அமைப்பாளருமான ஏ.எல். முஹம்மட் நஸீர் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் 120ற்கும் மேற்பட்ட முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு இரு டயர்கள் வீதம் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (08) முன்னாள் அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் அவர்களின் மக்கள் செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

அங்கு உரையாற்றிய முன்னாள் சுகாதார அமைச்சர்;

கிழக்கு மாகாணத்தில் மூவின மக்களுக்குமான வாழ்வாதார உதவித்தொகைகளை வழங்கி வைப்பதற்கான எனக்கு கீழ் இருந்த சமூக சேவைகள் அமைச்சு ஊடாக சரியான நிதிகளை ஒதுக்குவதற்கான ஏற்பாடுகளை நான் அன்று அமைச்சராக இருக்கும் போது செய்வதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தேன்.

குறித்த அமைச்சு ஊடாக பிரதேச ரீதியாக வாழ்வாதார மற்றும் கஷ்ட மக்களுக்கான நிதிகளை ஒதுக்கீடு செய்து அவர்களுக்கு உதவும் திட்டத்தின் மூலம் கடந்த சில வருடங்களாக இத்திட்டங்களை அமுல்படுத்தி வந்தேன் அதற்கமைய இம்முறையும் இவ்வாறு தங்களது உழைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பயனாளிகளுக்கு உதவும் நோக்கில் முச்சக்கரவண்டு டயர்களை வழங்கி அவர்களுக்கும் மக்கள் பிரதிநிதிகள் என்ற ரீதியில் வழங்கியுள்ளோம்.

சென்ற முறை பல பயனாளிகளுக்கு வழங்கி வைத்தோம் இம்முறை அதில் விடுபட்ட பயனாளிகளுக்கு வழங்கும் நோக்கில் அதற்கான நிதி ஒதுக்கீடு செய்து இவ்வாறு வழங்கி வைத்ததோடு அடுத்த முறை இதன் மூலம் விடுபட்ட பல பயனாளிகளுக்கு வழங்கி வைக்க திட்டமிட்டுள்ளேன்.

அரசியல் அதிகாரம் மாத்திரம் இருந்தால் தான் மக்கள் சேவைகளை செய்யும் முடியும் என்ற பதம் இல்லாமல் அதிகாரம் இல்லாவிடியிலு முடிந்தளவு மக்களுக்கு பயனாற்றவுள்ளோம் அதற்கு பின் நிற்கப்போவதும் இல்லை எனவும் முன்னாள் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

சப்னி அஹமட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM