ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சருமான அல் ஹாபிழ் நசீர் அஹமட்டினால்ஏறாவூர் அக்பர் ஜும்மா பள்ளிவாயலுக்கு போட்டோ கொப்பி  இயந்திரம் கையளிக்கும் நிகழ்வும் ஏறாவூர் தாவூத் பவுண்டேசனுக்கு தளபாடங்கள் வழங்கும் நிகழ்வும் நேற்று  இடம்பெற்றது,

 

அல் குர் ஆனைக் கற்கும் ஹாபிழ்கள் இங்கு கற்றுவருகின்றமையால் அவர்கள் தமது  கல்வி ஆவணங்களை  பிரதியெடுக்க அடிக்கடி வௌியெ செல்ல வேண்டியிருப்பதைக் கவனத்திற்  கொண்ட முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்  இந்த  போட்டோ கொப்பி இயந்திரங்களை  வழங்க நடவடிக்கை எடுத்தார்,

இதேவேளை ஏறாவூரிலுள்ள தவூத் பவுண்டேசனின்  வசதி குறைந்த மாணவர்கள் பலர் இங்கு வகுப்புக்களுக்கு வருவதை கருத்திற் கொண்டே கிழக்கின் முன்னாள் முதலமைச்சர் மாணவர்களின் நலன் கருதி  தளபாடங்களை பெற்றுக் கொடுத்தார்,

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM