மட்டக்களப்பில் கிழக்குமாகாண சுகாதார அமைச்சினால் 65 மில்லியனுக்கு மேற்ப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை கையளிக்கும் நிகழ்வு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சினால் கடந்த வருடம், இவ்வருடம் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை கையளிக்கும் நிகழ்வுகள் அன்மைக்காலங்களாக இடம்பெற்று வருகின்றது இதற்கமைய கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் மட்டக்களப்பு பிராந்தியத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை நாம் இன்று சிறப்பான முறையில் எவ்வித வேறுபாடுகளும் இல்லாமல் மதம், பிரதேசம் என்ற ரீயியில் இல்லாமல் எமது கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு மேற்கொண்டு வருகின்றது எனவும், கிழக்கு மாகாண சபையால் சகல இன மக்களுக்கும் சமமான வளப்பங்கீடு வழங்கப்படுகின்றது எனவும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹமம்மட் நஸீர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு பிராந்தியத்தில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை கையளிக்கும் நிகழ்வு நேற்று (14) இடம்பெற்றது.  இதன் கலந்துகொண்டு உரையாற்றும் போது அமைச்சர் மேற்கொண்டவாறு தெரிவித்தார்.

இதற்கமைய; இதனடிப்படையில் காத்தான்குடி தள வைத்தியசாலையில் 07மில்லியன் ரூபா நிதியில் அமைக்கப்பட்ட வெளிநோயாளர் பிரிவினை திறந்து வைக்கும் நிகழ்வும், 10.4 மில்லியன் ரூபா நிதியில் அமைக்கப்பட்ட வைத்தியர் விடுதி திறந்து வைக்கும் நிகழ்வும், பற்சிகிச்சைக் கூடம் மற்றும் அதற்கான இயந்திரங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வும், பயிற்சிக்கூடம் வழங்கிவைக்கும் நிகழ்வுடன் , வாழைச்சேனை வைத்தியசாலையில் 20 மில்லியன் ரூபா நிதியில் அமைக்கப்பட்ட மருந்தக கலஞ்சியசாலை, ஆய்வுகூட கட்டிடம் திறந்து வைக்கும் நிகழ்வும் , 21 மில்லியன் ரூபா நிதியில் வாழைச்சேனை, கோறளைப்பற்றில் அமைக்கப்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் திறந்து வைக்கும் நிகழ்வும்,  5.4 மில்லியன் ரூபா நிதியில் மட்டக்களப்பு, மீராவோடை வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட அவசர சிகிச்சைப் பிரிவு திறந்து வைக்கும் நிகழ்வு   இடம்பெற்றது.

 

இதன் போது அங்கு உரையாற்றிய அமைச்சர்;

 

கிழக்கு மாகாணத்தில் நாம் எதிர்நோக்கும் சவால்களில் வைத்தியர், தாதியர், ஊழியர்கள் போன்ற ஆளனிப்பிரச்சினைகளை நாம் எதிர்நோக்கி வருகின்றோம் இவ்வாற சவால்கள் முழு இலங்கையிலும் காணப்படுகின்றதால் எம்மால் நிவர்த்தி செய்வதில் பாரிய சிக்கல்கள் உள்ளது. அத்துடன் கிழக்கு மாகாணத்திற்கான  முழுமையான அதிகாரம் புதிய அரசியலமைப்பில் மத்தியரசினால் கிடைக்குமானால் இவ்வான பிரச்சினைகளை  தீர்த்துக்கொள்ள முடியும்.  கிழக்கு மாகாண முதலமைச்சர் இது தொடர்பாக அதிக கவனம் செலுத்தி வருகின்றார் அவரால் முடிந்தவரை மத்தியரசின் ஊடாக கிழக்கு மாகாண சுகாதார அபிவிருத்திக்கு உதவி வருகின்றார்.

இந்த மாகாணத்தில் சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என மூன்று இனத்தவர்களும் வாழ்கின்றனர்.  இந்த நிலையில் ஒரு இனத்துக்கு மாத்திரம் வளப்பங்கீடு அதிகரிக்குமானால் ஏனைய சமூகங்கள் தட்டிக் கேட்கும். அவ்வாற கேள்விகள் இல்லாதவாறே எமது அபிவிருத்தித் திட்டங்களை 04 பிராந்தியங்களிலும் மேற்கொண்டு வருகின்றோம். கிழக்கு மாகாணத்தினைப் பொறுத்தவரைக்கும் பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. அந்தப்பிரச்சினைளுக்கு எல்லாம் முகம் கொடுத்து நாம் அவற்றினை தீர்த்து வைத்து வருவதற்காக பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி தீர்த்து வருகின்றோம்.

மேலும், முழு இலங்கையிலும் கிழக்கு மாகாணத்திலையே அதிகமான ஆதார வைத்தியசாலைகள் உள்ளன இதை மத்தியரசும் கூட ஆச்சிரியமாக பார்த்து வருகின்ற வேளை நமது பிராந்தியங்களில் அனைவரினாலும் கேட்கப்படும் ஓர் கேள்வி ”எங்கள் வைத்தியசாலையும் ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்தி தாருங்கள்” என்பார்கள் ஆதார வைத்தியசாலையை தரமுயர்த்த வேண்டும் என்றால் அதற்கான சில நடைமுறை வளங்கள் சாத்தியமாக வேண்டும் அவ்வாற வளங்கள் சாத்தியம் இல்லை என்றால் ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்த முடியாது. எனவும் அமைச்சர் அங்கு தெரிவித்தார்

கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் பிரதம அதிதியாகவும், கெளரவ அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் ,இந்நிகழ்வில் அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கிழக்கு மாகாண சபையின் பிரதி தவிசாளர் இந்திரக்குமார் பிரசன்ன, ஷிப்லி பாரூக்,  கருனாகரன், நடராஜா ஆகியோருடன் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் உதவிச்செயலாளர் சியாகுல் ஹக், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்  உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இதன் போது கலந்துகொண்டனர்..

                 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM