முஸ்லிம்களுக்கு மிகப்பெரிய சவாலாகக் காணப்படும் காணிப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு  நல்லாட்சி அரசு இதுவரையில் முன்வரவில்லை. எனவே முஸ்லிம்களின் காணிப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நல்லாட்சி அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா தெரிவித்தார்.

முஸ்லிம் காங்கிரசின் எழுச்சிக் கூட்டம், காத்தான்குடியில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றது. அக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றிய போது,

இந்த விவகாரத்தில் ஜனாதிபதி அல்லது பிரதமர் தலையிட்டு காணி ஆணைக்குழுவை நியமித்து காணி இல்லாத முஸ்லிம்களுக்கு காணிகளை வழங்குவதற்கு முன்வரவேண்டும்.

சிறுபான்மையினச் சமூகமாக மட்டக்களப்பில் வாழும் முஸ்லிம் மக்களின் காணிப் பிரச்சினை தீர்த்து வைக்கப்பட்ட வேண்டும். பல தடவைகள் எமக்கான காணிப் பங்கீடு பற்றி கேட்ட போதெல்லாம் அதில் அக்கறை இல்லாது அதைக் கிடப்பில் போடப்பட்டுள்ளதையே எம்மால் அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

இந்த நாட்டில் முஸ்லிம்கள் இரண்டாந்தரப்பிரஜை அல்லர, நாங்களும் இலங்கையர்கள் என்ற அடிப்படையில் முதன்மையானவர்கள். முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் அரசியல் வேறு, ஆன்மிகம் வேறு என்று பிரித்துவிட முடியாது, ஆன்மீகத்துடன் அரசியல் செய்யும்போதே, பல சவாலான விடயங்களைச் செய்யமுடியும். முஸ்லிம் சமூக அரசியலில் வலுவான தலைமைத்துவமாகக் காணப்படும் முஸ்லிம் காங்கிரசைப் பலப்படுத்த முன்வரவேண்டும்” என்றார்.

எம்.எஸ்.எம்.நூர்தீன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM