எல்லா மக்களும் நல்லாட்சியினை விரும்பி நாட்டில் சுபீட்சம் இடம்பெரும் 30 வருட காலத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளை மறக்கக்கூடிய சூழல் உருவாகும், நீண்ட தீரக்கமான அபிவிருத்திகள் இடம்பெரும் எனவே தமிழ்ர் முஸ்லிம்கள் சிங்களவர் என்ற நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு தாயினுடைய பிள்ளைகளைப் போல் வாழலாம் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் இப்பொழுது அந்த நம்பிக்கை பொய்யாக்கப்பட்டு இன ரீதியான செயற்பாடுகள், இன முரண்பாட்டினைத் தூண்டுகின்ற செயற்பாடுகள், இன ரீதியாக மக்கள் அடையாளப்படுத்தப்பட்டு அவர்கள் தாக்கப்படுகின்ற, அவர்களினுடைய நிலபுலன்கள் கைப்பற்றப்படுகின்ற, அவர்களினுடைய உடமைகள் சேதமாக்கப்படுகின்ற நிகழ்வுகள் தொடர்ச்சியாக எல்லாப் பிரதேசங்களிலும் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.

இதை கண்டிக்கத்தக்க எல்லோரும் சேர்ந்து ஒரே குரலில் மனிதாபிமான ரீதியில் மனிதாகச் சிந்தித்து அநியாயமாக ஒருவரினுடைய உடமைகள் இழக்கப்படுகின்ற பொழுது இன ரீதியாக அவர் எந்த சமயத்தைச் சேர்ந்தவர் எந்த இனத்தினைச் சேர்ந்தவர், எந்த சாதியினைச் சேர்ந்தவர் என்ற ஒரு வியாபார ஸ்தலங்கள் தீக்கிரையாக்கப்படுகின்ற பொழுது, அவரது நிலபுலன்களிலிருந்து அப்புறப்படுத்தப்படுகின்றபொழுது மனிதாபிமான ரீதியில் எந்தவித இன வேறுபாடகளும் இன்றி எதிர்க்க முன்வரவேண்டும் என்று கௌரவ சபை உறுப்பினர்களுக்கு நான் இந்த சந்தர்ப்பத்தில் தாழ்மையான வேண்டுகோளை முன்வைக்கின்றேன்.

கௌரவ தவிசாளர் அவர்களே! தங்களுக்குத் தெரியும் எங்களுடைய எதிர்க்கட்சி தலைவர் அவர்கள் கூறியதுபோல் நாங்கள் அம்பாரை நகரினை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஒரு முதன்மையான அரசியல்வாதி. இதுவரை காலமும் இணக்காப்பாட்டுச் சுழலில் அரசியல் செய்வதற்கு விரும்பிக்கொண்டிருக்கின்ற நபர். தமிழ், முஸ்லிம். சிங்களவர் என்ற வேறுபாடுகள் இல்லாமல் எங்களினுடைய அபிவிருத்திப்பணிகளை கிரமமாக செய்துகொண்டிருக்கின்ற ஒரு மதிப்புக்குரிய கௌரவமிக்க சபை உறுப்பினர் என்ற ரீதியில் நீங்கள் இந்த சபையினை தலைமை தாங்குவதில் நாங்கள் எல்லோரும் ஒரு மனதுடன் பெருமையடைகின்றோம். உங்களுக்குரிய சகல ஒத்துழைப்புக்களையும் நாங்கள் இந்த சபையில் வழங்கிக்கொண்டிருக்கின்றோம் என்ற உண்மையினை யாரும் இந்த சந்தர்ப்பத்தில் மறுக்க முடியாது என்ற உண்மையினை இங்கு நான் தெரிவிக்க விரும்புகின்றேன்.

எது எவ்வாறு இருப்பினும் கௌரவ தவிசாளர் அவர்களே! அண்மையில் இடம்பெற்றுவருகின்ற நிகழ்வுகளானது 2010ம் ஆண்டு யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னர் கடந்த ஆட்சியின் இறுதிக்காலத்தில் தோற்றம்பெற்ற ஒரு சில இனவாதப் போக்குடையவர்களினால் தங்களினுடைய இனம் மேன்மைப்படுத்த வேண்டும் மற்றைய இனங்கள் அடிமைப்படுத்தப்பட வேண்டும் என்ற அடிப்படையில் செயற்பட்டுக்கொண்டிருந்தனர். ஒரு நிகழ்ச்சி நிரலைக் கொண்டு நடாத்தப்படுகின்ற சில இனவாதப் போக்குடைய செயற்பாடுள்ள உண்மையிலேயே தடைசெய்யப்பட வேண்டிய ஒரு சில இயக்கங்களினால் அரசு ரீதியான உதவிகளைக் கொண்டுள்ளார்களா என்று சந்தேகிக்கக்கூடிய ஒரு சூழலில் அனைத்த ஒத்துழைப்புக்களுடனும் அவர்களினுடைய செயற்பாடுகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.

இவற்றுக்கு கடந்த ஆட்சியின்பொழுது அரசு ஒத்துழைப்பு வழங்குகின்றது என்ற ஒரு அச்சம் சிறுபாண்மை மக்கள் மத்தியில் எழுந்ததனால்தான் கடந்த ஜனாதிபதி தேர்தலின்பொழுது ஒட்டுமொத்தமாக முழு சிறுபாண்மையும் சேர்ந்து கடந்த அரசுக்கு எதிராக வாக்களித்தார்கள் என்ற உண்மையினை நாங்க்ள மறந்துவிடமுடியாது. ஏனென்றால் வெளிப்படையாக முஸ்லிம்கள் வணங்குகின்ற இறைவனைத் தூற்றுகின்ற செயற்பாடுகள், வெளிப்படையாக முஸ்லிம்களினுடைய வியாபார நிலையங்களுக்குப் போகக்கூடாது சிங்களவர்களினுடைய வியாபார நிலையங்களில் முஸ்லிம்கள் வேலை செய்யமுடியாது, சிங்களவர்களை முஸ்லிம்கள் மணக்கக் கூடாது இவ்வாறு இன வேறுபாடுகளைத் தோற்றுவிக்கக்கூடிய செயற்பாடுகள் வெளிப்படையாக ஊடகங்களில் இடம்பெறுகின்ற செயற்பாடுகள் எந்தவித சட்டநடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாமல் இனவேறுபாடுகளைத் தூண்ட முயற்சிப்பவர்களுக்கு எதிராக தண்டனைச் சட்டக் கோவையில் எத்தனையோ சட்டங்கள் இருக்கின்றன, அவர்களை சட்டத்தின்முன் கொண்டுவந்து கைதுசெய்வதற்கு சட்ட ஏற்பாடுகள் இருக்கின்றது. அது மட்டுமில்லாமல் சர்வதேச சிவில் மற்றும் அரசியல் காப்புச் சட்டம் ஐக்கிய நாடுகள் சபையினால் இயற்றப்பட்டபொழுது அதற்கு கையொப்பதாரியாக இருந்த எமது இலங்கை தேசிய அரசு அதற்கான சட்டத்தினை 2010ம் ஆண்டு எமது பாராளுமன்று ஏற்றுக்கொண்டு அது ஒரு தண்டனைக்குரிய குற்றம் என்ற ரீதியில் மேல் நீதிமன்றத்தில் தண்டிக்கப்படலாம் என்ற சட்டங்கள் இருக்கின்ற ரீதியில் ஏன் எதுவித சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பது என்பதுதான் அரசும் இதற்கு ஒத்துழைப்பு வழங்குகின்றதா என்ற ஒரு ஐயப்பாட்டினை சிறுபாண்மை மக்கள் மத்தியில் ஏற்படுத்துகின்றது.

அவ்வாறான செயற்பாடுகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற ஆனால் பொலிசாரும் பாராது இருக்கின்றனர் அரசும் பாராது எந்தவித சட்ட நவடடிக்கைகளும் அரசு மேற்கொள்ளவில்லை உடனடியாக சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு இதற்குரிய தண்டனைகளை வழங்க வேண்டும் என்று இந்த சபை உரிய நபர்களிடம் முன்வைக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கின்றேன்.

கௌரவ தவிசாளர்அவர்களே! அம்பாரை நகரில் கடந்த 22ம் திகதியன்று அதிகாலை 2 மணியளவில் மாவட்ட செயலகத்திற்கு முன்னாள் உள்ள ஒரு சிங்கள சகோதரருக்கு உரிமையான கடையினை ஆதம்லெப்பை அஸ்கர் எனப்படுகின்ற இறக்காமவாசியான ஒரு நபரினால் வாடகைக்கு எடுக்கப்பட்டு 2009ம் ஆண்டு வாடகைக்கு எடுக்கப்பட்டு இற்றைவரை வெற்றிகரமாக அனைத்து மக்களுக்கும் சேவையாற்றக்கூடிய அளவுக்கு ஒரு சிறிய தேநீர்க்கடையினை மாதாந்தம் 30,000 ரூபா வாடகை கொடுத்து நடாத்தி வருகின்ற சந்தர்ப்பத்தில் கடந்த 22ம் திகதியன்று திங்கட்கிழமை அதிகாலை 2 மணியளவில் அடையாளம்தெரியாத நபர்களினால் அந்தக் கடை தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இது தொடர்ச்சியாக இடம்பெற்றுவருகின்ற சந்தர்ப்பம். அனைத்து சிங்களப் பெரும்பாண்மை நகரங்களிலும் இடம்பெற்றுவருகின்ற சம்பவம் இப்பொழுது எங்களுடைய கிழக்கு மாகாணத்திலேயே இடம்பெற்றுவருகின்றமையை நாங்கள் கண்கூடாகக் கண்டுகொண்டு வாழாதிருப்போமேயானால் எங்களுடைய கிழக்கு மாகாண சபை அனைத்து சமூகத்தினருக்கும் பாதுகாப்பு வழங்குகின்ற ஒரு சபை என்ற கோட்பாடு பொய்ப்பிக்கின்றது கௌரவ சபாநாயகர் அவர்களே.

உங்களுக்குத் தெரியும் டொனால்ட் ட்ரம்ப் அவர்க்ள ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்;டதன் பின்னர் முஸ்லிம்களுக்கு எதிரான பல வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டது, வொஸிங்டனிலிருந்த பள்ளிவாசல் ஒன்று தீக்கிரையாக்கப்பட்டது. அந்த தீக்கிரையாக்கப்பட்ட சம்பவத்தை டொனால்ட் ட்ரம்ப் அவர்களுக்கு வாக்களித்த வெள்ளை இன மக்களே அதனை எதிர்த்து அந்தப் பள்ளிவாசலினைக் கட்டுவதற்கான நிதியினை ஒரே நாளில் 24 மணித்தியாலத்திற்கு திரட்டிக்கொடுத்த சம்பவம் இடம்பெற்றதனை நான் இந்த சந்தர்ப்பத்தில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

எங்களுடைய கௌரவ சபை உறுப்பினர் வீரசிங்க அவர்கள் உடனடியாக அங்குசென்று பார்க்க வேண்டும். அக்கடை உரிமையாளருக்கும் ஆதம்லெப்பை அஸ்கர் எனப்படுகின்ற நபருக்கும் ஆறுதல் கூறவேண்டும். இனிமேல் இவ்வாறான சம்பவங்கள் எங்களுடைய நகரில் இடம்பெறாது, அதற்கு நாங்கள் உறுதியளிக்கின்றோம், நாங்கள் உங்களினுடைய சேதத்தினை அரசுமூலம் பெற்றுத்தருவதற்கு வாக்களிக்கின்றோம் என்ற ஒரு இரக்கமான செயற்பாடு இடம்பெறவேண்டும் என்று நான் கௌரவமாக கேட்டுக்கொள்கின்றேன்.

கௌரவ தவிசாளர் அவர்களே எங்களினுடைய கிழக்கு மாகாணசபையும் அதனை ஊக்குவிக்காத அளவுக்கு இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றபொழுது அதனை தவிர்ப்பதற்கு, அதற்கான நிவாரணங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகள் சபையில் இருக்க வேண்டும். அதற்காக சகல இனங்களினையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற உறுப்பினர்களைக் கொண்ட இவ்வாறான சேதங்கள் இடம்பெறுகின்றபொழுத அதனை உடனடியாக மதிப்பிடக்கூடிய அளவுக்கு கட்டிடடத் திணைக்களத்தில் இருந்து உத்தியோகத்தர்களைக் கொண்ட கொமிட்டி 24 மணித்தியாலங்களும் இயங்கக்கூடியவாறு நியமிக்குமாறு பணிவாக சபாநாயகர் அவர்களை கேட்டு விடைபெறுகின்றேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM