Web
Analytics
முஸ்லிம் காங்கிரஸின் கடிவாளம் யார் கைகளில்? - Sri Lanka Muslim Congress

முஸ்லிம் காங்­கிரஸ் சிறு­பான்மை கட்சி என்ற வகையில், குறிப்­பாக 1994 க்குப் பிறகு எதிர்க்­கட்சி அர­சி­யலிலிருந்து ஆளும் கட்­சிக்கு ஆத­ர­வ­ளித்து அமைச்சு பத­வி­களை பெற்றுக் கொண்­டதன் பின்னர் அக்­கட்சி எதிர்­கொண்ட பல்­வேறு சவால்கள் தவிர்க்க முடி­யா­த­தொன்­றா­கவே மாறி­விட்­டன.

முஸ்லிம் காங்­கி­ரஸின் அர­சி­யல்­வா­திகள் மாத்­தி­ர­மல்ல, முஸ்லிம் காங்­கி­ரஸின் வாக்­கா­ளர்­க­ளுக்கும் மத்­தியில் அர­சியல் பற்­றிய வித்­தி­யா­ச­மான புரி­தல்கள் ஏற்­பட்­டன, ஏற்­ப­டுத்­தப்­பட்­டன. 

இன, மத­வாத சிந்­த­னை­களால் கருக்­கொண்ட பேரி­ன­வாத கட்­சிகள் ஆளு­கின்ற ஒரு நாட்டின் சூழலில் சிறு­பான்மைக் கட்­சிகள் அர­சியல் நடாத்­து­வ­தென்­பது மிக சவா­லான விடயம். இது முஸ்லிம் காங்­கி­ர­ஸுக்கு மாத்­தி­ர­மல்ல அதி­க­மான சிறு­பான்மை கட்­சி­க­ளுக்கும் பொருந்தும். இருப்­பினும், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் அர­சியல் பயணம் விடு­த­லைப்­பு­லிகள் மற்றும் டயஸ்­போரா போன்றவற்றின் கட்­டுப்­பாட்­டிலும் சர்­வ­தேச சக்­தி­களின் ஆத­ரவும் அதற்கு இருந்­த­ப­டியால் அத­னது அர­சியல் பயணம் ஒப்­பீட்­ட­ளவில் சர்ச்­சைகள், தடு­மாற்­றங்கள் குறைந்­த­துதான்.

மர்ஹூம் அஷ்ரப் முஸ்லிம் காங்­கிரஸ் கட்­சியை சாதா­ர­ண­மான மக்­க­ளது ஆத­ரவைக் கொண்­டுதான்  தோற்­று­வித்தார். கட்­சியின் யாப்பு அல்­குர்ஆ,ன் ஹதீஸாக இருந்­தாலும் யாரும் அத­ன­டிப்­ப­டையில் பயிற்­று­விக்­கப்­பட்ட மகான்கள் அல்ல என்ற உண்­மையை ஏற்­றுக்­கொள்­ளத்தான் வேண்டும். 

இத்­த­கைய பின்­ன­ணியைக் கொண்ட முஸ்லிம் காங்­கி­ரஸில் உட்­கட்சிப் பிள­வுகள், பேரி­ன­வாத கட்­சி­களின் சதி முயற்­சி­களில் கட்சி சிக்கிக் கொள்­வ­தா­னது மாமூல் அர­சியல் கட்­ட­மைப்பில் தவிர்க்க முடி­யா­தது என்­பது தொடர்பில் மக்­க­ளுக்கு தெளிவிருத்தல் அவ­சி­ய­மாகும்.

கட்­சியிலிருந்து பிரிந்து சென்­ற­வர்கள் சமூகம், கட்சி சார்ந்த கொள்கை அடிப்­ப­டை­யில்தான் பிரிந்து சென்­றார்கள் என்ற வாதம் ஒருபோதும் ஏற்­றுக்­கொள்­ளவே முடி­யாது. அதி­கா­ரங்­களை பங்­கீடு செய்­வதில் ஏற்­பட்ட தனி நபர் முரண்­பா­டு­களை கட்­சிக்கு எதி­ரான வெளிச் சக்­திகள் பயன்­ப­டுத்திக் கொள்­கின்ற போது பிள­வுகள் இல­கு­வாக ஏற்­பட்டு விடு­கின்­றன. வெளி­நாட்டு உள­வுப்­பி­ரிவு முதல் உள்­நாட்டு சதி­கா­ரர்கள் வரை கடந்த காலங்­களில் இக்­கட்­சிக்கு எதி­ராக செயற்­பட்­டுள்­ளனர்.

அதே­நேரம், தற்­போது கட்­சி­யி­லுள்ள, அல்­லது கட்­சியில் இணைந்து கொள்வோர் அனை­வரும் சமூகம் சார்ந்த கொள்­கை­யில்தான் கட்­சி­யோடு உள்­ளார்கள், இணை­கி­றார்கள் என்றும் அர்த்­தப்­ப­டுத்­தி­டவும் முடி­யாது. பல­ருக்கு தனி­பட்ட நிகழ்ச்சி நிரல் இருப்­பது என்­பது தவிர்க்க முடி­யா­தது. சில நேரம் முனாபிக் என்று சொல்­லக்­கூ­டிய அள­வுக்கு செயற்­ப­டக்­கூ­டி­ய­வர்­களும் கட்­சியில் மறை­மு­க­மாக இருக்­கக்­கூடும். ஏனெனில், நபி­களார் அர­சாண்ட மதீனா காலப்­பி­ரி­வில்தான் முனா­பிக்­குகள் என்போர் தோற்றம் பெற்­றனர் எனும் போது அர­சியற் கட்சி ஒன்றில் இது­வொன்றும் பெரிய விட­ய­மாக இருக்க முடி­யாது.

இந்தக் கட்­சியை அழிக்க வேண்­டு­மென இங்கு யாரும் முயற்­சிப்­பார்­க­ளாயின் அது முஸ்லிம் சமூ­கத்­திற்கு செய்யும் துரோ­க­மா­கவே கரு­தப்­பட வேண்டும். கட்­சியில் குறை கண்டு கடந்த காலங்­களில் பிரிந்து சென்றோர் அனை­வரும் சமூகம் சார் கொள்­கையின் அடிப்­ப­டையில் ஒரு கூட்­ட­மைப்பின் கீழ் அல்­லவா செயற்­பட்­டி­ருக்க வேண்டும். ஆளுக்­கொரு தனிக்­கட்சி தொடங்க வேண்­டி­யதன் அவ­சி­யம்தான் என்ன. இங்கு பிள­வுக்­கான பிர­தான காரணம் சமூ­கமோ கொள்­கையோ அல்ல, அதி­காரம் சார்ந்­தது என்­பதை இல­கு­வாக புரிந்து கொள்ள முடியும்.

ஆனால் இன்று தேர்­தலில் தோற்­றுப்­போன பலர், நானும் ரவு­டிதான் என்­பது போல் நாங்­களும் அர­சி­யலில் தான் உள்ளோம் எனக் காட்­டு­வ­தற்­காக முஸ்லிம் கூட்­ட­மைப்பின் அவ­சியம் பற்றி பேசத் தொடங்­கி­யுள்­ளனர். இதன் பின்­ன­ணியில் முஸ்லிம் சமூ­கத்­திற்கு எதி­ரான சக்­திகள் ஒன்று சேர்ந்து இவர்­க­ளுக்கு கை கொடுக்க ஆரம்­பித்­துள்­ளன.

இவ்­வா­றா­ன­தொரு நிலையில் முஸ்லிம் காங்­கிரஸ் கட்­சியின் எதிர்­கா­லம்தான் என்ன, இந்தக் கட்­சியின் செயற்­பா­டுகள் இனி வரும் காலங்­களில் எவ்­வாறு அமையப் போகின்­றன என்­ப­துதான் முக்­கி­ய­மாக ஆரா­யப்­பட வேண்டும்.

கட்­சி­யொன்­றினை வழிப்­ப­டுத்­து­வதில் விமர்­ச­கர்­களின் பங்­க­ளிப்பு இன்­றி­ய­மை­யா­தது. அந்த விமர்­ச­கர்கள் எப்­ப­டிப்­பட்­ட­வர்கள் என்­ப­தில்தான் விமர்­ச­னத்தின் நேர்­மைத்­தன்மை அமைந்­துள்­ளது. இவ்­வி­மர்­ச­கர்கள் விட­யத்தில் முஸ்லிம் காங்­கிரஸ் கவனம் செலுத்தி, கட்­சியை புதிய உத்­வே­கத்­துடன் பய­ணிக்கச் செய்­வது அவ­சி­ய­மாகும்.

அந்த வகையில் முஸ்லிம் காங்­கிரஸ் பற்றி விமர்­சிப்­ப­வர்­களை பிர­தா­ன­மாக மூன்று வகைப்­ப­டுத்­தலாம்.
முத­லா­வது வகை­யினர், ஆடு நனை­கி­றது என ஓநாய் அழுத கதைக்கு ஒப்­பா­ன­வர்கள். இவர்­க­ளுக்கும் இந்த கட்­சிக்கும் எந்­த­வொரு நேரடித் தொடர்பும் இருக்­காது. கடந்த காலங்­களில் முஸ்லிம் காங்­கி­ர­ஸுக்கு எதி­ராக களத்தில் நின்று செயற்­பட்­ட­வர்கள். அதே­போன்று கட்­சியின் தலை­மைத்­துவம் மற்றும் முக்­கிய உறுப்­பி­னர்­க­ளுடன் தனிப்­பட்ட ரீதியில்  முரண்­பா­டு­களை கொண்­டோரும் இதில் அடங்­குவர்.

இவர்­க­ளது நோக்கம் கட்­சியில் அவ்­வப்­போது ஏற்­படும் முரண்­பா­டு­களை தமக்கு சாத­க­மாக பயன்­ப­டுத்­திக்­கொள்ள கட்­சியை விமர்­சிக்கத் தொடங்­குவர். முஸ்லிம் காங்­கி­ரஸில் ஏற்­படும் முரண்­பா­டு­க­ளில்தான் இவர்­க­ளது அர­சியல் பிழைப்பு தங்­கி­யுள்­ளது. தான் சார்ந்த கட்­சி­யையும் அர­சி­யல்­வா­தி­க­ளையும் புகழ் பாடும் இவர்கள் முஸ்லிம் காங்­கிரஸ் விட­யத்தில் தூக்­கத்­தி­லி­ருந்து எழுந்­த­வனைப் போல் திடீர் கரி­சனை காட்­டு­வ­தென்­பது கோமா­ளித்­த­ன­மான செயற்­பா­டு­க­ளா­கவே அர­சி­யலில் கரு­தப்­படும். இவர்கள் விட­யத்தில் அலட்­டிக்­கொள்ளத் தேவை­யில்லை. ஏனெனில், இவர்­க­ளது விமர்­சனம் நேர்மைத் தன்­மை­யற்­றது.

இரண்­டா­வது வகை­யினர், கட்­சியில் உள்ள தனி­ந­பர்­க­ளுக்கு பின்­னா­லுள்ள அபி­மா­னிகள். இவர்கள் கட்­சி­யையும் விட தாங்கள் விரும்பும்  தனி­ந­பர்­க­ளுக்கே விசு­வா­ச­மாக இருப்­பார்கள். கட்­சியில் தாங்கள் விரும்பும் தனி­ந­பர்­க­ளுக்கு எதிர்­பார்த்த அதி­கா­ரங்கள், வரப்­பி­ர­சா­தங்கள் கிடைக்­காத பட்­சத்தில் கட்­சிக்கு எதி­ராக விமர்­சிக்கத் தொடங்­குவர். சில நேரம் தங்­க­ளுக்கு விசு­வா­ச­மான தனி­ந­பர்­க­ளோடு சேர்ந்து கட்­சியை விட்டு வெளி­யேறி, கட்­சியை அழிக்க நினைக்கும் சக்­தி­க­ளுக்கும் துணை போவர்.

சில­நேரம் கட்­சி­யினால் தனி­ந­பர்­க­ளுக்கு உண்­மையில் பாதிப்­புக்கள் ஏற்­ப­டு­கின்ற போதிலும், அவற்­றினை சரி­வர கையாளத் தெரி­யாமல் எதி­ரா­ளி­களின் மூளைச்­ச­ல­வைக்கு உட்­படக் கூடி­ய­வர்­களும் இதில் உள்­ளனர். இவர்கள் கட்­சியைச் சார்ந்­த­வர்கள் என்ற வகையில் இவர்கள் விட­யத்தில் கட்சித் தலைமை கவனம் செலுத்தி அவர்­க­ளது மன வேத­னை­க­ளுக்கு தீர்வு சொல்ல வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். அதே­நேரம் கட்­சிக்குள் இருந்து ஆக்­க­பூர்­வ­மாக விமர்­சிப்­ப­வர்­களும் உண்டு.

மூன்­றா­வது தரப்­பினர், நேர்­மை­யான விமர்­ச­கர்கள். இவர்­க­ளது விமர்­சனம் சமூகம் சார்ந்த விமர்­ச­ன­மா­கவே இருக்கும். இருப்­பினும், இவர்­க­ளுக்கும் இக்­கட்­சிக்கும் எந்­த­வொரு தொடர்பும் இருக்­காது. தேர்­தல்­களில் எந்தக் கட்­சிக்கும் கூட வாக்­க­ளித்தும் இருக்க மாட்­டார்கள். கட்சி என்­பதை விட சமூகம் என்றே சிந்­திப்பர். 

இவர்­க­ளது விமர்­ச­னத்தின் பல­வீனம் என்­பது, நேர்மை என்ற வட்­டத்­தினுள் மாத்­திரம் இருந்து கொண்டு, இத்­த­கைய மாமூல் அர­சியல் சூழ்­நி­லை­களில் கட்­சிக்குள் என்­னதான் நடக்­கின்­றது, எத்­த­கைய நிகழ்ச்சி நிரல்கள் அரங்­கேற்­றப்­ப­டு­கின்­றன போன்ற விட­யங்­களில் போதிய தெளிவு இல்­லாமல், வெறு­மனே ஊட­கங்கள் சொல்லும் தக­வல்­களை மைய­மாக வைத்து மகான்­க­ளுக்கு உப­தேசம் செய்­வது போல் தொடர்ச்­சி­யாக உப­தேசம் செய்து கொண்டே இருப்பர். சில­நே­ரங்­களில் உப­தேசம் செய்து களைத்தும் போய், சாபம் இடவும் தொடங்­கி­வி­டுவர்.

இத்­த­கைய விமர்­ச­கர்கள் உண்­மையில் மாற்றம் ஒன்றை ஏற்­ப­டுத்த விரும்பின் அவர்கள் கட்­சிக்கு வெளியில் இருந்து கொண்டு விமர்­சித்து எதுவும் ஆகப் போவ­து­மில்லை. அவர்­களால்  முஸ்லிம் காங்­கி­ர­ஸுக்கு எதி­ராக மாற்று அர­சியல் சக்­தி­களை உரு­வாக்­கு­வது சாத்­தி­ய­மு­மில்லை. அது நிறை­வேறப் போவ­து­மில்லை. 

இவர்கள் நேர்­மை­யான அர­சியல் விமர்­ச­கர்கள் எனில், இவர்கள் கிராம மட்­டங்­களில் இருந்து முஸ்லிம் காங்கிரஸ் கட்சியோடு இணைந்து நேரடி அரசியலின் பங்குதாரர்களாகவும் நாளைய தலைவர்களாகவும் மாறவேண்டும். அப்போதுதான் கட்சியில் ஒட்டி கொண்டிருக்கும் முனாபிக்தன்மை கொண்டவர்கள் ஓரங்கட்டப்பட்டு, திறமையானவர்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கும்.

சிறந்ததொரு பொறிமுறையைக் கொண்டு முஸ்லிம் காங்கிரஸ் கட்சியையும் தலைமையையும் வழிநடத்தும் ஆற்றல் இத்தகைய விமர்சகர்களுக்கே உண்டு. இவர்கள்தான் கட்சியின் கடிவாளமாக இருப்பார்கள். அதற்கான வாசல் திறக்கப்பட வேண்டும்.

அந்தவகையில், முஸ்லிம் காங்கிரஸ் எனும் கட்சி பாதுகாக்கப்பட வேண்டுமாயின் புதிய உத்வேகத்துடனும் தூர நோக்குடனும் செயற்படும் இளைஞர்கள் கிராம மட்டங்களில் இருந்து  கட்சியில் இணைந்து கட்சியின் கடிவாளமாக மாற வேண்டும். அவர்களுக்கான பயிற்சிகளை கட்சி வழங்கி நாளைய தலைவர்களாக அவர்கள் சமூகத்தை வழிகாட்ட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM