கொழும்பு டீ.பீ. ஜாயா மாவத்தையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள முஸ்லிம் சமய விவகார, கலாசார அலுவல்கள் திணைக்களத்துக்குரிய முஸ்லிம் பண்பாட்டு கட்டிடத்தொகுதியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் நேற்று (17) பிற்பகல் திறந்து வைத்ததார்.

2002 – 2004 ஆம் ஆண்டு காலப்பகுதியில் முஸ்லிம் சமய, கலாசார அமைச்சராக ரவூப் ஹக்கீம் இருந்தபோது இக்கட்டிடம் அமைப்பதற்கான அமைச்சரவை அனுமதியை பெற்றதுடன் சவூதி அரசின் நிதியையும் பெற நடவடிக்கை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இக்கட்டிடத்தை அமைப்பதற்கான வரைபடம் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் வழிகாட்டலில் தயாரிக்கப்பட்டபோது, அதில் முஸ்லிம் மக்களின் பல்வேறு தேவைப்பாடுகளும் உள்வாங்கப்பட்டன. தொழுகையறை, இஸ்லாமிய நூல்நிலையம், இஸ்லாமிய நூதனசாலை, நவீன வசதிகளுடன் கூடிய மாநாட்டு மண்டபம், விருந்துபசார மண்டபம் மற்றும் வாகன தரிப்பிட வசதி உள்ளிட்ட சகல வசதிகளும் உள்ளடக்கப்பட்ட பல மாடிக் கட்டிடமாக வரைபடம் தயாரிக்கப்பட்டிருந்தது.

இதற்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபக தலைவர் அமைச்சர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் வழிகோலியிருந்தார். அத்துடன் மர்ஹூம் செய்யித் அலவி மௌலானா மற்றும் அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி ஆகியோரும் உரிய பங்களிப்பை நல்கியது நினைவு கூரத்தக்கது.

இந்நிகழ்வில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம், அமைச்சர் ஹலீம் உட்பட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாட்டு தூதுவர்கள் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.

His Excellency the President, Maithripala Sirisena declared open a new building complex at the premises of the Department of Muslim Religious and Cultural Affairs Ministry, at T B Jayah Mawatha, Colombo 10, this afternoon. SLMC Leader and Minister of City Planning and Water Supply Rauff Hakeem also took part at the event.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM