றிஸ்வான் இப்றாஹீம்
கோரளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் AG.அஸீஸுர் ரஹீம் அவர்களின் வேண்டுகோளில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்குடாத்தொகுதி அமைப்பாளரும் அதியுயர்பீட உறுப்பினருமான எச்.எம்.எம்.றியாழ் அவர்களினால் குடிநீர்த்தாங்கிகள் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டன.

அறபா நகர், பாலைநகர், பறங்கியர் கிராமங்களில் நிலவி வரும் பாரிய குடிநீர்த்தட்டுப்பாட்டை தற்காலிகமாக நிவர்த்தி செய்யும் நோக்கில், கோரளைப்பற்று மேற்கு பிரதேச சபை உறுப்பினர் AG.அஸீஸுர் ரஹீம் அவர்கள் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்குடாத்தொகுதி அமைப்பாளரும் அதியுயர்பீட உறுப்பினருமான எச்.எம்.எம்.றியாழ் அவர்களிடம் முன்வைத்த கோரிக்கைக்கமைய மேற்படி குடிநீர்த்தாங்கிகள் நேற்று  19.05.2018ம் திகதி சனிக்கிழமை அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டன.

குடிநீர்த்தாங்கிகளை வழங்கி வைக்கும் நிகழ்வில் கோரளைப்பற்று மேற்கு பிரதேச சபை உறுப்பினர் AG.அஸீஸுர் ரஹீம் அவர்களுடன், முன்னாள் கோரளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் எஸ்.ஐ.முஹாஜிரீன், கிராம அபிவிருத்திச் சங்கத்தலைவரும், தியாவட்டவான் ஹாலித் பின் வலீத் பள்ளிவாயல் செயலாளருமான ஐ.றிஸ்வான் ஆகியோருடன் பிரதேச பொதுமக்கள், பள்ளிவாயல் நிருவாகிகளும் கலந்து கொண்டனர்.

குறித்த நீர்த்தாங்கிகள் இப்பிரதேச மக்கள் பயன்பெறும் வகையில், அறபா நகர் சஜும்ஆப் பள்ளிவாயல், பாலைநகர், பறங்கியர் கிராமம் ஆகிய இடங்களில் வைக்கப்பட்டுள்ளன.

இப்பிரதேச மக்களின் நன்மைகருதி எமது வேண்டுகோளையேற்று உடனடியாக இக்குடிநீர்த்தாங்கிகளை வழங்கிய உதவிய சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்குடாத்தொகுதி அமைப்பாளரும் அதியுயர்பீட உறுப்பினருமான எச்.எம்.எம்.றியாழ் அவர்களுக்கு இப்பிரதேசத்தின் மக்கள் பிரதிநிதி என்ற வகையில், எனது சார்பாகவும் இப்பிரதேச மக்கள், சமூக நிறுவனங்கள், பொது அமைப்புக்கள், பள்ளிவாயல்கள், பொது மக்கள் சார்பாகவும் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என கோரளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் AG.அஸீஸுர் ரஹீம் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM