Web
Analytics
மு.கா ஏற்பாட்டில் மதுரங்குளியில் இடம்பெறும் இப்தார் நிகழ்வு; அமைச்சர் ரவூப் ஹக்கீம் கலந்து கொள்கிறார். - Sri Lanka Muslim Congress

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் புத்தளம் மாவட்ட அமைப்பாளரும், புத்தளம் நகர முதல்வருமான  கே.ஏ.பாயிஸ் மற்றும் வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ். எச் .எம். நியாஸ் ஆகியோருடன் இணைந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் புத்தளம் அக்கரபத்து மத்திய குழு ஏற்பாடு செய்துள்ள வருடாந்த மாபெரும் இப்தார் நிகழ்வு எதிர்வரும்  2ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறவுள்ளது.

குறித்த நிகழ்வு மதுரங்குளி ட்ரீம் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள், நகர சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இவ்விஜயத்தின் போது புத்தளம் அக்கரபத்து பிரதேசத்தில் கொத்தான்தீவு, கொத்தான்தீவு கொளனி, பெருக்குவட்டான், சமீரகம, கணமூலை, விருதோடை, மதுரங்குளி ஆகிய கிராமங்களில்  முன்னெடுக்கப்பட்டுள்ள (R/O  Plant) குடிநீர் திட்டங்களை திறந்து வைத்து பொது மக்கள் பாவனைக்கு கையளிக்கவுள்ளார்.

இதன்போதே மதுரங்குளி ட்ரீம் வரவேற்பு மண்டபத்தில்  இடம்பெறும் இப்தார் நிகழ்விலும் அமைச்சர் ஹக்கீம் உட்பட முக்கியஸ்தர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதேவேளை, அன்றைய தினம் ஆயிரம் பேருக்கு இப்தார் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM