மூதூர் பிரதேச விவசாயிகள் நீண்ட காலமாக உரிய நீர்ப்பாசன வசதியின்றி பல்வேறு சிரமங்களையும் கஸ்டங்களையும் அனுபவித்தே வந்துள்ளனர்.நீர்ப்பாசன பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினை பெற்றுக் கொள்ளுமுகமாக கடந்த 70 வருடங்களாக காலத்திற்கு காலம் வந்த அரசியல் வாதிகள் ஊடாக பல்வேறு முயற்சிகள் மேற் கொள்ளப்பட்ட போதிலும் அது கைகூடவில்லை கடந்த 2015ல் நடைபெற்ற பாராளுமன்ற பொது தேர்தலின் போது மூதூருக்கு வருகை தந்த என்னிடம் மூதூர் பிரதேச விவசாயிகளும் மூதூர் பிரதேச ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்  கட்சி பிரமுகர்களும் என்னிடம் புதிய நீர்ப்பாசனத் திட்டம் தொடர்பான பிரதான கோரிக்கையை முன் வைத்தனர் இதனை செவிமெடுத்த நான் தேர்தல் முடிந்த பிற்பாடு செய்து தருவதாக தேர்தல் வாக்குறுதியாகவே வழங்கினேன் இதன் பிரகாரம் பின்வரும் வேலைத் திட்டங்கள்களை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

01. ” ரஜஅர.” வடிச்சல் ஊடாக கிணாந்தி முனைக்கு காடி ஒன்று அமைத்து புதிதாக 1.5km நீளமான புதிய வாய்க்கால் வெட்டி அதனூடாக மூதூர் பிரதான வாய்க்காளுக்கு தண்ணீர் கொண்டு வந்து 700 ஏக்கர் பரப்பளவான மூதூர் விவசாய நிலங்களுக்கு நிரந்தரமாக தண்ணீர் வழங்குதல்.


02. கரீம் ஓடையில் அமைக்கப்பட்ட ” ஓவர் குரோசிங்” காடியில் இருந்து 1km நீளமான புதிய வாய்க்கால் வெட்டி அதன் ஊடாக 170 ஏக்கர் மூதூர் விவசாய நிளங்களுக்கு நீரை பெற்றுக் கொடுத்தல்.

03. தற்போது நிலவும் வரட்சியான சூல்நிலை காரணமாக மூதூர் விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிரார்கள் இதனைக் கருத்திற் கொண்டு 2017.07.12 (புதன்)முதல் தொடர்ச்சியாக 06 நாட்களுக்கு வயல் நிலங்களுக்கு தேவையான போதிய நீரை பெற்றுக் கொடுப்பதற்கான உத்தரவாதத்தை மூதூர் பிரதேச நீர்ப்பாசன பொறியியலாளர் k. அகிலன் அவர்கள் எனது முன்னிலையில் விவசாயிகளுக்கு வாக்குறுதி வழங்கினார்.


இந்த நீர்ப்பாசன அபிவிருத்தி திட்டம் தொடர்பாக 2017.07.11ம் திகதி மூதூர் நீர்ப்பாசன காரியாலயதில் எனது தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட நீர்ப்பாசன பணிப்பாளர் ஜனாப் அஸார் அவர்களும் பிரதேச நீர்ப்பாசன பொறியியலாளர் திரு. அகிலன் அவர்களும் மூதூர் பிரதேச விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM