நீண்ட காலமாக செப்பனிட படாமல் இருந்த மூதூர் மின்சார நிலைய வீதி ( 0.4 KM ) 6.5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் காபட் வீதியாகவும் சுமார் 57 வருடங்களாக செப்பனிட படாமல் குண்றும் குழியுமாக காணப்பட்ட இலுப்பச் சோலை வீதி (1.8 KM ) 8 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் தார் வீதியாகவும்  புனரமைப்பு செய்யும் வேலை திட்டங்கள்  இன்று (13) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கௌரவ ஜே.எம் லாஹீர் அவர்களின் அயராத முயற்சியினால் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் கௌரவ ஆரியவதி கலபதி அம்மணி அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் இவ் வீதிகள் புனரமைப்பு செய்யப்படுகிறது.

இவ் வேலைத்திட்ட ஆரம்ப வைபவத்தில் பிரதம அதிதியாக வீதி அமைச்சர் ஆரியவதி கலபதி அம்மணியும் விசேட அதிதியாக   கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கௌரவ ஜே.எம் லாஹீர், மற்றும்  மூதூர் பிரதேச சபை முன்னாள் தவிசாளர் கௌரவ AMM. ஹரீஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் நூராணியா கிளைத் தலைவர் AWM.யாசீர்,  மூதூர் பிரதேச சபை செயலாளர் AWM .ஹில்மி மற்றும் அமைச்சின் அதிகாரிகள் கட்சிப் போராளிகள்  பொதுமக்கள் என பலரினதும் பங்கு பற்றுதலுடன் சிறப்பாக நடைபெற்றது.

Sawmy Sanas 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM