Web
Analytics
மூன்று தடைகளால் பாலமுனை மண் ஈன்ரெடுத்த அலியார், ஹனிபா, அம்ஜத் ஆகியோரின் மு.கா வென்ற சரித்திரம் - Sri Lanka Muslim Congress

உள்ளூராட்சிமன்ற வட்டார தேர்தல்- 2018 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸ் இன் பாலமுனை வெற்றி வேட்பாளர்கள் எங்கள் மனதில் தடம் பிடிக்கும் SMM. ஹனிபா மற்றும் மௌலவி MSM. அம்ஜத் அஸ்கரி ஆகிய இருவரின் மகிழ்ச்சி பெருவிழாவும் மாபெரும் தேர்தல் பெரும் பிரச்சாரமும் எங்கள் சாணக்கியத் தலைவன் அல்ஹாஜ் அப்துல் ரவூப் ஹக்கீமை எதிர்கொண்ட இவ் ஏற்பாடு ஆரம்பித்த நேரம் 15:00 மணி என்றிருந்தாலும் அப்பெருவிழா பாலமுனை-6 திராய்க்கேணியிலிருந்து பாலமுனை-1 உதுமா புரம் நோக்கி ஊர்வலமாகச் சென்றது. பின்னர் சின்னப்பாலமுனையில் ஓர் இடத்திலும் இன்னுமொரு இடத்திலும் ஊர்வலம் சென்றுகொண்ட வேளையில் சென்ற பிரதேசசபை பிக்அப் வண்டிகளில் கழட்டியெடுக்கப்பட்ட டயர்களை அன்சிலின் ஏமாளிகளால் பாதைகளை மறிப்பதற்கும் எரிப்பதற்கும் போடப்பட்ட நொடியே அவையனைத்தும் அமைப்பாளர் A.L.M. அலியாரால் முறியடிக்கப்பட்டு ஊர்வலம் மிக வெற்றிகரமாக சென்றன

இதில் பாலமுனை-4 ஹுசைனியா நகர் மற்றும் பாலமுனை-5 வெற்றி வேட்பாளர் மௌலவி M.S.M. அம்ஜத் அஸ்கரி அவர்களின் காரியாலய திறப்பு விழாவும் பாரிய ஒரு போர்க்களத்தின் மத்தியிலே ஊர்வலத்துடன் வெற்றிகரமான முறையில் 16:35 மணியளவில் நிறைவு பெற்று பின் அல்ஹிதாயா வட்டார வெற்றி வேட்பாளரின் காரியாலயம் A.L.M. அலியாரின் தலைமையில் சாணக்கியத் தலவர் அல்ஹாஜ் ரவூப் ஹக்கீமால் திறந்து வைக்கப்பட்ட மகிழ்ச்சிப் பெருவிழா மாபெரும் தேர்தல் பிரசாரத்தின் மேடையும் இனிதே பல சாவல்களை முறியடித்து 17: 05 மணி அளவில் நிறைவு பெற்றன.

அப்பொழுதே சாணக்கியத் தலைவர் ஒலிவில் கிராமத்திற்குச் சென்று கட்சியின் வெற்றி வேட்பாளர்களின் காரியாலயங்களையும் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார். 

இதே வேளை எங்கள் மகிழ்ச்சிப் பெருவிழா மாபெரும் தேர்தல் பிரச்சாரம் ALM.அலியார் தலைமையில் அல்ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு முன்பு SMM.ஹனிபாசேரின் சொந்த இடமாம் எங்கள் வட்டார வேட்பாளர் உள்ளூராட்சி மன்ற அட்டாளைச்சேனை பிரதேசசபையை வென்றெடுக்கும் காரியாலயத்தின் பிரமாண்டமான மேடையில் பல போராட்டத்தின் தடங்களையும், அன்சிலின் அப்போதய தடங்களைப்பற்றியும் சகோதரர் M .ஹுதைப் இனால் மேடையில் விளக்கம் கொடுக்க ஆரம்பமான நிலையில் அன்சிலின் காட்டுமுராண்டிகள் பலர் மேடைக்கு முன்னால் வந்து எதிர்ப்பொலிகளையும் கல் எறிதல்களையும் பலப்படுத்தினர். பின்னர் ஹனீபா Sir, அலியார் Sir, அம்ஜத் Sir போன்றோர்களின் கட்சி போராளிகளினால் மடக்கிப் பிடித்து எறியப்பட்டனர் அன்சிலின் குண்டாத் தடியர்கள்

அதன் பிறகு சாணக்கியத் தலைவர் அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் இரண்டாவது விஜயமாக 140 நிமிடங்களின் பின்னரே 20:37 மணியிலே மீண்டும் எங்கள் மேடைக்கு பல்லாயிரக்கணக்கான வாக்களர் சார்பானோர் ஆரவாரத்தோடு கட்சியின் கீதத்தால் அலங்கரிக்கப்பட்டார்! மக்களால் போற்றப்பட்டார், சமூகம் தந்தார்☆☆☆☆☆

மேடையில் பலரின் பேச்சுக்கள் ஒலியெழுப்பப்பட்டன பலீல் பீஏ, தலைவர் அலியார், அம்ஜத் அஸ்கரி, ஹனிபா Sir போன்றோரின் மேடைப் பேச்சுக்கள் அரங்கேறின. இவ்வேளை அன்சிலின் காட்டுமிறாண்டித்தனத்தால் மின்சாரம் தூண்டிக்கப்பட்டன. அப்பொழுது நாங்கள் மேடையின் செயற்கை இயந்திர மின்சாரத்தினால் மிக வெற்றிகரமான முறையில் வென்ற மண்ணை மீண்டும் பல சவால்களோடு கட்சியின் ஆதாரமாம்; உரிய மேடைகள் திட்டமிட்டபடியே பேச்சொலி அதிர்வுகளால் மேடையே அதிர்ந்தன. அன்சிலின் காடையர்கள் ஒழிந்தனர்

இப்பொழுதுதான் சாணக்கியத் தலைவர் சட்ட முதுமாணி அல்ஹாஜ் அப்துல் ரவூப் ஹக்கீம்மேடையே அதிரும் அளவிற்கு அன்சிலின் ஒவ்வொன்றையும் பிட்டுப்பிட்டு காட்டினார். 
》கட்சியில் இருந்த ஹசன் அலியின் செயலாளர்ப் பதவியை அன்சில் தனக்குத் தரும்படியும்÷
》அட்டாளைச்சேனை பிரதேச சபையின் சார்பில் தவிசாளர் சங்கத்தை உருவாக்கித் தாருங்கள் எனவும், இன்னும் பல அமைச்சர்களுக்கும் மாகாணசபை உறுப்பினர்களுக்கும் எப்படி ஆப்புத் தீட்டலாம் எனும் ஒவ்வொரு பதவி ஆசைகளையும் அன்சிலில் இருந்து கற்றுக்கொண்ட அவ்வளவு உடன்பாடுகளையும் இப் பெரும் பிரச்சாரக் கூட்டத்தில் இந்த மேடையில் நம் தலைவர் அவர்கொண்ட தலைப்பாரத்தை இறக்கி பாலமுனையிலே அன்சிலின் முகத்திலே எடுத்தெறிந்துவிட்டுச் சென்றார் தங்கத் தலைவர் எம் சாணக்கியர். இவரின் இந்த மணித்தியாலப் பேச்சு மிக பல அபிலாசைகளையும் ஆர்வங்களையும் கவர்ந்தன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்.

இப்போதே; அப்பொழுதே மருதமுனை நகரின் மேடைக் கூட்டத்திற்கு சென்றார் எங்கள் தலைவர் அப்துல் ரவூப் ஹக்கீம். மீண்டும் சின்னப்பாலமுனை மேடைப் பேச்சுக்கு அலியாரின் தலைமைத்துவத்தில் மீண்டும் சமூகமளிப்பார் நம் தலைவர். இன்ஷாஅல்லாஹ்…,

இதுவரை வரலாறு காணாத ஜனத்திரளோடு பாலமுனை மண்ணில் முஸ்லிம் காங்கிரஸின் மாபெரும் பொதுக்கூட்டம் அமைப்பாளர் அலியார் அவர்களின் தலைமையில் ஒரு சில சதிகாரர்களின் தூக்கத்தை கலைத்து, பல சதிகளை முறியடித்து 14.01.2018 நேற்று இறைவனின் உதவியோடு நடைபெற்று முடிந்தது அல்ஹம்துலில்லாஹ்.!!

The Organized by Mr. A.L.M.Aliyar
SLMC (14.01.2017)
Palamunai

 

Careem Naleem
அப்துல் கரீம் நழீம்…✍🏻
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
பாலமுனை
(15.01.2018/08:00)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM