மொரீசியஸ் நாட்டில் இடம்பெற்றுவரும் சர்வதேச விளையாட்டுப் போட்டியில் ஒரு அங்கமான சர்வதேச கடற்கரை கபடி போட்டியில் இலங்கை அணி சம்பியனாக தெரிவு செய்யப்பட்டு தங்கப்பதக்கத்தினை வென்றுள்ளது.

சர்வதேச கடற்கரை கபடி போட்டி மொரீசியஸ் நாட்டு தலைநகரான போட் லொய்ஸ் நகரில் நேற்று (19) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

இறுதிப் போட்டியில் இலங்கை அணியினை எதிர்த்து ஓமான் நாட்டு அணி மோதியது. இதில் இலங்கை அணி வெற்றி பெற்று சம்பியனானது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மொரீசியஸ் நாட்டு உப ஜனாதிபதி பீ.பீ.வையாபூரி. கௌரவ அதிதியாக மொரீசியஸ் நாட்டுக்கு விஜயம் செய்துள்ள விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி ஹரீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் பல்வேறு நாடுகளின் விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட விளையாட்டுத்துறை ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

பிரதி அமைச்சர் ஹரீஸ் நாட்டுக்கு சர்வதேச போட்டி ஒன்றில் புகழைப் பெற்றுத்தந்த இலங்கை வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இதன்போது பிரதி அமைச்சர் ஹரீஸ், மொரீசியஸ் நாட்டு உப ஜனாதிபதியினால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

– ஊடகப் பிரிவு –

Image may contain: 13 people, people standing and outdoor

Image may contain: 3 people, people standing, sky and outdoor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM