ஹல்கொல்ல – ரமுக்கேஎல பாதையை காபட் வீதியாக மாற்றுவதற்கான ஆரம்ப வேலையினை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வு இன்று (14) ஹல்கொல்ல மலை உச்சியில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது.

இப்பாதை அபிவிருத்தியினால் ஹங்குமுர, பூஜாபிட்டிய, கண்டி, அலவதுகொட, மாத்தளை, அக்குரனை போன்ற பிரதேசங்களை சேர்ந்த பிரயாணிகள் பயனடைவர்.

பூஜாபிடிய பிரதேசசபையின் முன்னாள் பிரதி தவிசாளர் ஏ.எல்.எம். ரஸான் அவர்களின் வேண்டுகேளுக்கிணங்க அமைச்சர் ரவூப் ஹக்கீமின் நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சினூடாக 45 இலட்சம் ரூபா நிதி இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் எம். நயீமுல்லாஹ், கட்சியின் பூஜாபிட்டிய தொகுதி அமைப்பாளர் பரீட் உட்பட அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM