சாய்ந்தமருது டஸ்கர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் 5 ஆண்டு நிறைவை முன்னிட்டு அர்ஷாத் காரியப்பர் பௌண்டஷனின் பிரதான அனுசரணையில் நடைபெற்ற லீடர் அஷ்ரஃப் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணம் 2017 இரவுநேர மின்னொளி மென் பந்து சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டி நிகழ்வு நேற்று (9) ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருது பௌசி ஐக்கிய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் ஏ.எல். அப்துல் மஜீத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவரும் நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சருமான சட்டமுதுமாணி றவூப் ஹக்கீம், கௌரவ அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், விஷேட அதிதிகளாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், ஏ.எல். தவம், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உயர் பீட உறுப்பினர்களான AC.யஹியாக்கான்,மற்றும் போட்டிக்கு பிரதான அனுசரணை வழ்ங்கிய கல்முனை உளவளதுறை வைத்திய ஆலோசகர் அர்சாத் காரியப்பர், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர்களர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

அணிக்கு 7 பேர் கொண்ட 5 ஓவர் மட்டுப்படுத்தப்பட்ட இச்சுற்றுப்போட்டியின் அரை இறுதிப் போட்டியில் கல்முனை லெஜென்ஸ் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து ஒலுவில் லோயல் விளையாட்டுக் கழகமும் அக்கரைப்பற்று யூத் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து நிந்தவூர் றியல் இம்ரான் விளையாட்டுக் கழகமும் விளையாடி இறுதிப்போட்டிக்கு கல்முனை லெஜென்ஸ் விளையாட்டுக் கழகமும் நிந்தவூர் றியல் இம்ரான் விளையாட்டுக் கழகமும் தெரிவு செய்யப்பட்டது.

இறுதிப் போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற கல்முனை லெஜென்ஸ் விளையாட்டுக் கழகம் முதலில் துடுப்பெடுத்தாடி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 23 ஓட்டங்களைப் பெற்றது, 24 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நிந்தவூர் றியல் இம்ரான் விளையாட்டுக் கழகம் விக்கட் இழப்பின்றி 2 ஓவர்கள் நிறைவில் 24 ஓட்டங்களைப் பெற்று வெற்றிபெற்றது. 
இப்போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு கடின பந்து விளையாட்டு உபகரணங்களும் இரண்டாவது இடத்தைப் பெறும் அணிக்கு மென்பந்து விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட விளையாட்டு பொருட்களும் வழங்குவதாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸ் வாக்குறுதியளித்தமைக்கு அமைவாக அப்பரிசில்கள் வழங்கப்பட்டதோடு, வெற்றி பெற்ற அணிக்கு அமைச்சர் றவூப் ஹக்கீமின் 50 ஆயிரம் ரூபா பணப் பரிசு உள்ளிட்ட வெற்றிக் கிண்ணமும் இரண்டாமிடத்தைப் பெற்ற அணிக்கு அமைச்சர் றவூப் ஹக்கீமின் 25 ஆயிரம் ரூபா பணப்பரிசு உள்ளிட்ட கிண்ணமும் வழங்கி வைக்கப்பட்டது.

இப்போட்டியின் ஆட்ட நாயகன் விருது நிந்தவூர் றியல் இம்ரான் விளையாட்டுக் கழக வீரர் அர்சாத் கானுக்கு வழங்கப்பட்டதோடு இச்சுற்றுப்போட்டியின் தொடர் ஆட்ட நாயகன் விருது நிந்தவூர் றியல் இம்ரான் விளையாட்டுக் கழக அணித் தலைவருக்கு வழங்கிவைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM