Web
Analytics
வாகரை, கிரான் பிரதேசங்களில் வீட்டுத்திட்டம்;  பிரதியமைச்சர் அலி சாஹிர் மௌலானா தலைமையில் அடிக்கல் நடப்பட்டது - Sri Lanka Muslim Congress

கோரளைப்பற்று தெற்கு (கிரான்) பிரதேச செயலகத்தின் கிரான் கிழக்கு விஷன் கேணி மற்றும் கோரளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகத்தின் கதிரவெளி புதூர் வீடமைப்பு திட்டங்களுக்கான அடிக்கல் இன்று (5) தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் பிரதியமைச்சர் அலி சாஹிர் மௌலானா அவர்களினால் நட்டு வைக்கப்பட்டது.

வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசவின் எண்ணக்கருவில் தேசிய வீடமைப்பு அதிகார சபை ஊடாக 40வீடுகள் குறித்த திட்டத்தின் ஊடாக நிர்மாணிக்கப்பட உள்ளன.
இதன்போது பிரதம அதிதியாக கலந்து கொண்ட பிரதியமைச்சர் அலி சாஹிர் மௌலானா அவர்களினால் வீட்டுத்திட்ட பயனாளிகளுக்கான காசோலைகளும் வழங்கி வைக்கப்பட்டன..

இதன் போது கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் ராஜ்பாபு, ஐக்கிய தேசிய கட்சி மாவட்ட அமைப்பாளர் மகேஷ்வரன் . வீடமைப்பு அதிகார சபை உதவி முகாமையாளர் நிர்மலன் , சஜித் பிரேமதாச ஜெனரேஷன் அமைப்பின் பிரதேச இணைப்பாளர் சுவதீசன் , பிரதியமைச்சரின் செயலாளர் முன்னாள் அதிபர் சயீத் , வீடமைப்பு அதிகார சபை ,மற்றும் பிரதேச செயலக அதிகாரிகளும் கலந்து சிறப்பித்தனர் .

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM