வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மல்வானை மக்களுக்கு உதவும் வகையில் மேற்கொள்ள வேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பாக மக்கள் கருத்தறியும் ஒன்றுகூடல் இன்று ஞாயிற்றுக்கிழமை(28) ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் மல்வானை ரக்‌ஷபான ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்றது.

மீட்பு பணிகளில் பயன்படுத்துவதற்கான வளங்களை வழங்குவதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் இதன்போது உறுதியளித்தார். அத்துடன் எதிர்காலத்தில் வெள்ளம் வருவதை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்றை பியகம பிரதேச செயலகத்தில் நடத்துவதெனவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

இக்கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா, மேல்மாகாண சபை உறுப்பினர் ஷாபி ரஹீம், தேசிய அமைப்பாளர் ஷபீக் ரஜாப்தீன், பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஊர்பிரமுகர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM