நாட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டமக்களுக்கு உதவுவதற்காக கிழக்கு மாகாண சபை அவசர தீர்மானமொன்றை நிறைவேற்றி அதற்கான நிதியாக 09 மில்லியன் ரூபாவினை கிழக்கு மாகாண சபை சேகரித்து அம்மக்களிடம் இன்று (03) கிழக்கு மாகாண சபையின் இருந்து சென்ற உயர்மட்டக் குழு கையளித்தது. .

மாத்தறை, தெனியாய மற்றும் பிட்டபெத்தர பகுதியில் வௌ்ளத்தால்பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த மற்றும் சேதமடைந்த வீடுகளை உடையவர்களுக்கான கட்டடப்பொருட்கள் என 09 மில்லியன் ரூபா நிதியில் உதவிப்பொருட்களை அம் மக்களிடம் கையளித்தனர்.

இதன் போது, கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சர் நசீர் அஹமட், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர், கிழக்கு மாகாணசபையின் பிரதம செயலாளர் சரத் அபேகமுவ, கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ அஸீஸ் உள்ளிட்டவர்களுடன் கிழக்கு மாகாணசபையின் அதிகாரிகளுடம், அப்பிரதேச மக்கள் பிரதிநிதிகளும் அமைச்சர் சாகல ரத்னாவின் வருகைக்கு பதிலாக அவரின் பிரத்தியேக செயலாளரும் கலந்துகொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM