Web
Analytics
வெள்ள அனர்த்தத்திலிருந்து புத்தளம் நகரை மீட்டெடுப்பதற்கான வேலைத்திட்டம் - Sri Lanka Muslim Congress

வெள்ள அனர்த்தத்திலிருந்து புத்தளம் நகரை மீட்டெடுப்பதற்கான வேலைத்திட்டம் ஒன்றை நீர்ப்பாசனம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு புத்தளம் நகரில் முன்னெடுக்கவிருக்கின்றது.

இது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நீர்ப்பாசனம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரதியமைச்சர் கௌரவ. ரங்க பண்டார அவர்களின் தலைமையில் இன்று(06) புத்தளம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

இதில் புத்தளம் நகர பிதா கே.ஏ. பாயிஸ் அவர்கள் கலந்துகொண்டு புத்தளம் நகரிலுள்ள வடிகாலமைப்பு தொடர்பான பூரண விளக்கத்தை தெளிவுபடுத்தினார். அவற்றை ஏற்றுக்கொண்ட அமைச்சர் இது தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக குழுவொன்றையும் நியமித்தார்.

அக்குழுவில் புத்தளம் நகர பிதா கே.ஏ. பாயிஸ், மாவட்ட செயலாளர் சித்ரானந்த, பிரதேச செயலாளர், நீர்பாசன திணைக்கள பொறியியலாளர், வீதி அபிவிருத்தி அதிகாரசபை பொறியியலாளர் மற்றும் முன்னாள் நகர சபை உறுப்பினர் ஏ.ஓ. அலிகான் ஆகியோர் இடம்பெறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM