Web
Analytics
வேசிப்பட்டம் வாங்குவதற்கு தரம்கெட்டவர்களல்லர் எம் சமூகத்தினர் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மாஹிர் சாடல் - Sri Lanka Muslim Congress

கல்விக்காகவோ, காசுக்காகவோ வேசிப்பட்டம் வாங்குவதற்கு தராதரம் கெட்டவர்கள் அல்லர் எம் சமூகத்தினர்.அமைச்சர் விஜேதாஸவின் கூற்று தென்கிழக்கின் ஒட்டுமொத்த மக்களின் மனங்களையும் சிதரடித்து விட்டது – என முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம். மாஹிர் தெரிவித்தார்.

 

அமைச்சர் விஜேதாஸவின் கூற்றுக்கு பதிலளிக்கும் வகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

அமைச்சர் விஜேதாஸ கடந்த 8ஆம் திகதி பாரளுமன்றத்தில் ஆற்றிய உரையில் ‘தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவிகள் பாலியல் இலஞ்சம் கொடுத்து பரீட்சைகளில் வெற்றிபெறுவதாக’ கூறியமையானது மிகவும் கண்டிக்கத்தக்க வார்த்தைப்பிரயோகமாகும்.

எமது நாட்டிலுள்ள மூத்த புத்திஜீவியும், அறிவாளியாகவும் சித்திரிக்கப்பட்ட இவரா இவ்வாறான அசமந்த கூற்றை வெளியிட்டிருக்கின்றார் என்று நோக்கும்போது, இந்த வசனத்தை சுயநினைவுடன்தான் சுறினாரா? என்பதிலேயும் ஐயம் இருக்கின்றது.
நாட்டின் உயர்நிலையிலுள்ள பொறுப்பு வாய்ந்த மரியாதைக்குரிய அமைச்சாகிய உயர்கல்விக்கு அமைச்சராக இருந்து கொண்டு தனக்கு கீழுள்ள குறித்த பல்கலைக்கழகத்தினை அவமதித்து பேசியது அறிவுபூர்வமற்றதும், மனிதாபிமானமற்றதுமான குறுகிய மனப்பாங்குள்ள செயலாகும்.

நாட்டில் பட்டம் முடித்து வெளியேறும் மாணவர்கள் படும் கஷ்டங்களும், துயரங்களும் எண்ணிலடங்காதவை அப்படியான துயர்களுக்கு மத்தியில் கற்று, அதன் பின்னர் பல்வேறு அரச, தனியார் துறைகளில் துறைசார்ந்த தொழி;ல்களுக்காக மதிப்புகளுடனும், மரியாதைகளுடனும் சென்று தங்கள் எதிர்காலத்திற்காக சேவைசெய்ய ஒவ்வொரு மாணவர்களும் சுமார் 5 வருடங்கள் பல்கலையில் விடாப்பிடியாக பாடுபட்டு கல்விகற்கின்றனர்.

இவ்வாறன நிலையில் பட்டம் முடித்து வெளியேறிய பின்னரும் அனைவருக்கும் உடனடி தொழில்வாய்ப்புக்கள் இன்றி பல அவதிகள். இப்படி பட்டம் முடித்தும் பரிவதவிக்கும் நிலையில் எமது மாணவர்களின் நிலை உள்ளபோது ஒழுக்ககோவைகள் சீரில்லை எனக் கூறுவதும், மாணவர்கள் விரிவுரையாளர்களுக்கு பாலியல் இலஞ்சம் கொடுத்தார்கள் எனக் கூறுவதும் படித்த மேதைகளின் அறிவிலித்தனம் என்றே கூற வேண்டும்.

தென்கிழக்கு பல்கலைக்கழகமானது இதுவரை காலமும் எவ்வித கலங்கத்துக்கும் உட்பாடமல் இருப்பது பலரதும் காழ்ப்புணர்ச்சியின் உச்சமும் கூட. குறித்த அமைச்சர் இவ்வாறு கூறியமையால் தென்கிழக்கு பல்கலைக்கழத்தில்; கற்கின்ற ஒவ்வொரு மாணவர்களையும், விரியுரையாளர்களையும் அவமானப்படுத்தியதாகவே கருத வேண்டும். அவ்வாறு நோக்கினால் அங்கு கற்கைநெறிகளை தொடர்கின்ற முழு இலங்கையின் ஒவ்வொரு பகுதி மாணவர்களும், விரிவுரையாளர்களும் ஒழுக்க சீர்கேடர்களாகவே கருதப்படும். தமிழ், முஸ்லிம், சிங்களம் என அனைத்து மாதத்தினரும் அங்கு கல்விகற்கின்றனர்.

அமைச்சரின் கூற்றை ஆளமாகப்பார்த்தல் ஒரு நாட்டின் உயர்கல்வியில் இப்படி ஒரு நிலை உருவாகியுள்ளது என நோக்கும் போது எவ்வளவு பாரதூரமாக உள்ளது. எது எவ்வாறாக இருந்தாலும் ஒரு நாட்டின் ஒழுக்கம் கல்வியில் தொட்டுதான் எங்கும் செல்லும்.

எனவே கற்றல் ஒழுக்கமாக இருக்க வேண்டியதும் அதை நடைமுறைப்படுத்த வேண்டியதும் அராசாங்கத்தின் தலையாய கடமையாகும். பொறுப்புக்கூற வேண்டியவர்களே இவ்வாறு தனிப்பட்ட காரணங்களுக்காக பொறுப்பில்லாமல் பேசுவது அறிவின்மையின் உச்சம் என்றுதான் கூறவேண்டும் – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM