Web
Analytics
ஸ்பெயின் பார்சிலோனாவுக்குச் செல்லவுள்ள 12 வயதின் கீழ் கால்பந்து வீரன் மொஹமட் ஸெய்யித் இப்ஹாமிற்கான வரவேற்பு நிகழ்வு - Sri Lanka Muslim Congress

ஸ்பெயினின் பார்சிலோனா விளையாட்டுக் கழகத்தின் பயிற்சிப் பட்டறைக்கு செல்லவுள்ள 12 வயதின் கீழ் பிரிவுக்கு இலங்கையில் இருந்து 12,600 பேரில் 450 பேர் தெரிவு செய்யப்பட்டு அதிலும் அதிக திறமைகளை வெளிப்படுத்திய 4 பேர் தெரிந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

அதில் ஒருவரான மைலோ கோல்டன் பூட் இனை வென்ற மொஹமட் ஸெய்யித் இப்ஹாம் அவர்களுக்கான பாராட்டு நிகழ்வு ப்ளக் ஸ்கெயார் விளையாட்டுக் கழகம் மூலம் நேற்றைய தினம் (21) கொழும்பு சிட்டி லீக் கால்பந்தாட்ட மைதானத்தில் நடைபெற்றது.

நிகழ்வில் ப்ளக் ஸ்கெயார் விளையாட்டுக் கழகத்தின் தலைவரும், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் மேல் மாகாண சபை உறுப்பினருமான அர்ஷாட் நிஸாம்தீன், மாநகர சபை உறுப்பினர் அனஸ், பயிற்சியாளரான கரூ மாஸ்டர் மற்றும் ஏனைய விளையாட்டு வீரர்களினால் ஸெய்யித் இப்ஹாம் வரவேற்கப்பட்ட நிகழ்வினை படத்தில் காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM