Web
Analytics
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பசுமைப்புரட்சி - Sri Lanka Muslim Congress
பிறவ்ஸ்
 
ஒரு முஸ்­லிம் ஒரு மரத்தை நட்டு அல்லது விதை விதைத்து விவசாயம் செய்து அதிலிருந்து (அதன் விளைச்சலை) ஒரு பறவையோ அல்லது ஒரு மனிதனோ அல்லது ஒரு பிராணியோ உண்டால், அதன் காரணத்தால் ஒரு தர்மம் செய்தமைக்கான பிரதிபலன் அவருக்கு கிடைக்கும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் பின் மா­க் (ர­லி), நூல்: புகாரி 2320
 
இலங்கையின் மொத்த நிலப்பரப்பில் 6.56 மில்லியன் ஹெக்டெயர் நிலப்பரப்பு வனப் பிரதேசங்களாக காணப்படுவதுடன், 1999ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட வனங்கள் பற்றிய கணக்கெடுப்பின் பிரகாரம் இலங்கையில் 1.94 மில்லியன் ஹெக்டெயர் நிலப்பரப்பு வனப்பிரதேசமாக காணப்படுகின்றது. இது மொத்த நிலப்பரப்பில் 29.5 சதவீதமாகும். இதற்கு மேலதிகமாக, விவசாய ரீதியில் 20% தாவரங்கள் காணப்படுகின்றன.
 
நகரமயமாதல் மூலம் இந்த சொற்பளவான வனங்களும் அருகிக்கொண்டே வருகின்றன. அத்துடன் கட்டிடம் கட்டுதல், வீதி அபிவிருத்தி, மரத்தளபாட உற்பத்தி போன்ற பல்வேறு அபிவிருத்திப் பணிகளினால், மக்கள் வசிப்பிடங்களிலுள்ள மரங்களும் வெட்டப்படுகின்றன. இதனால், சுவாசிப்பதற்கு சிரமப்படுகின்ற ஒரு சூழலிலேயே மனிதன் தனது வாழ்நாளை கழிப்பதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளான்.
 
மாசுபட்ட சூழலில் வசிக்கும் மனிதனுக்கு சுத்தமான காற்றை வழங்குவதற்கு ஒட்சிசன் தொழிற்சாலை எனப்படும் மரங்கள் பெரிதும் உதவுகின்றன. நவீனமயமாதல் மூலம் அழிந்துவரும் மரங்களுக்குப் பதிலாக புதிய மரங்களை வளர்ப்பதன்மூலமே எதிர்கால சந்ததியினர் நீடித்துநிலைபெறும் பயன்பாட்டை அடைந்துகொள்ளமுடியும்.
 
நாட்டில் பசுமைப்புரட்சியை ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கில், நடைபெறுகின்ற நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் அரசியல்வாதிகள் அந்தந்த இடங்களில் மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர். அப்படி நடப்படுகின்ற மரக்கன்று நீர் ஊற்றப்பட்டு தொடர்ச்சியாக பராமரிக்கப்படுகின்றதா என்று பார்த்தால் கேள்விக்குறிதான் எஞ்சி நிற்கின்றது. இப்படியான சூழ்நிலையில் “வீட்டுக்கு வீடு மரம்” என்ற செயற்திட்டத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயற்படுத்தி வருகிறது.
 
மரத்தை தனது கட்சியின் சின்னமாகக்கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வீடுவீடாகச் சென்று மரங்களை நடும் வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துவருகிறது. மரம் நடப்பட்ட பின்னர், அதனைப் பராமரிப்பதற்காக இளைஞர் காங்கிரஸ் மூலம் பல வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. “வீட்டுக்கு வீடு மரம்” செற்திட்டத்துக்காக விசேட பணிமனையொன்று கட்சித் தலைமையகம் தாருஸ்ஸலாமில் அமைக்கப்பட்டுள்ளது.
 
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் வெளியிடங்களுக்குச் செல்லும் தனது நிகழ்ச்சிநிரலில் வீட்டுக்கு வீடு மரம் நிகழ்ச்சித்திட்டத்தையும் இணைத்துக்கொண்டுள்ளார். தெரிவுசெய்யப்பட்ட வீடுகளில் அமைச்சர் தனது கையாலேயே மரக்கன்றுகளை நாட்டிவைக்கிறார். அத்துடன் அந்த வீட்டாரின் குடும்ப நிலவரங்களை கேட்டறிந்துகொள்கிறார். இதன்மூலம், மக்கள் பிரச்சினைகளை அமைச்சரின் காலடிக்கு எடுத்துச்செல்லும் நிலவரம் மாற்றப்பட்டு, மக்களின் காலடிக்கு சென்று பிரச்சினைகளை கேட்டறியும் நிலைமை உருவாக்கப்பட்டுள்ளது.
 
முஸ்லிம் கிராமங்களின் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிலுமுள்ள வீடுகளை தனித்தனியாக எடுத்து, அதன் கீழுள்ள இளைஞர்களையும் அவர்கள் மூலம் பெரியோர்களையும் இணைத்துக்கொண்டு முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை அடுத்த தலைமுறையினருக்கு கையளிப்பது “வீட்டுக்கு வீடு மரம்” நிகழ்ச்சித்திட்டத்தின் மற்றுமொரு நோக்கமாகும்.
 
முஸ்லிம் காங்கிரஸின் மக்கள் பிரதிநிதியாக ஒவ்வொருவரும் இளைஞர் காங்கிரஸ் ஊடாக இந்த வேலைத்திட்டத்தை ஒவ்வொரு ஊர்களில் முன்னெடுக்குமாறு ரவூப் ஹக்கீம் அறிவுரை வழங்கியுள்ளார். இதன்பிரகாரம் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் என பலரும் “வீட்டுக்கு வீடு மரம்” திட்டத்ததை தங்களது பிரதேசங்களில் முன்னெடுத்து வருகின்றனர். இதன்மூலம் மரங்களை நடுவது மாத்திரமின்றி, மக்களின் பிரச்சினைகளை நேரில் கண்டறிந்து அதற்கு தீர்வுகாணும் ஒரு நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
 
மரங்கள் நடப்பட்ட வீடுகளுக்கு அமைச்சர் ரவூப் ஹக்கீமின் கைப்பட எழுதப்பட்ட கடிதமும், மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரபினால் வெளியிடப்பட்ட “எமது பார்வை” என்ற நூலும், அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படமும் தபால்மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அடுத்த கட்டமாக அந்தந்த வீடுகளிலுள்ள குடும்ப அங்கத்தவர்கள், வருமானம், கல்விநிலை, வேலைவாய்ப்பு மற்றும் நோய்வாய்ப்பட்டோர் போன்ற விபரங்களை திரட்டுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 
அதனைத்தொடர்ந்து, அந்தந்த குடும்பங்களிலுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் நோக்கில் விசேட செயற்திட்டமொன்று அமுல்படுத்தப்படவுள்ளது. மக்களின் காலடிக்கே சென்று அவர்களது பிரச்சினைகளை தீர்த்துவைப்பதன் மூலம், மக்களுடன் நெருக்கமானதொரு உறவைப் பேணும் கட்சியாக முஸ்லிம் காங்கிரஸ் தன்னை அடையாளப்படுத்தியுள்ளது.
 
“வீட்டுக்கு வீடு மரம்” செயற்திட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து நடாத்துவதற்கு மரக்கன்றுகளை உற்பத்தி செய்யும் இடமொன்றை உருவாக்குவதற்கும் முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. பசுமைப்புரட்சி மூலம் இயற்கையை வளர்ப்பதுடன் மக்களுக்கும் சேவை செய்யும் கட்சியின் இந்தப்பணி மகத்தானது.
நன்றி – நவமணி 
Displaying _DSC0168.JPG
Displaying 1H6A2329.JPG
Displaying 1H6A8353.JPG

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM