மிக நீண்ட வரலாற்றினையும் பூர்வீகத்தையும் கொண்ட பெரும்பான்மையான இலங்கை முஸ்லிம்களின் ஆதரவு பெற்ற தனித்துவமான கட்சியாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்  விளங்குகிறது.

இலங்கை முஸ்லிம்களின் உரிமைக்கான கட்சியாக உருவாக்கப்பட்ட  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிற்காலத்தில் பாரிய அபிவிருத்திப்பணிகளை தேசிய ரீதியில் செய்துவருகின்றமை அந்தக் கட்சி மீதான நம்பகத்தன்மையையும் விசுவாசத்தையும் ஆழமாக விதைத்துள்ளது.

 
பெருந்தலைவர் அஸ்ரப் அவர்களின் காலத்தில் எவ்வாறு சமூக உரிமைக்கான சாத்வீகப் போராட்டங்களை அவர் முன்னெடுத்து அதில் வெற்றி கண்டாரோ அவற்றில் கிஞ்சித்தும் குறைவில்லாமல் தலைவர் ரவூப் ஹக்கீம் செயற்பட்டு வருவதும் அபிவிருத்திப்பணிகளில் நாடளாவிய ரீதியில் திட்டமிட்டு செயலாற்றி வருவதும் வெளிச்சத்திற்க்கு கொண்டு வரவேண்டிய உண்மைகளாகும்.
 
இந்த நல்லாட்சியின் மிகமுக்கிய பங்காளர்களான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆழமான சமூகக் கட்டமைப்பையும், காத்திரமான அபிவிருத்திக்கான கட்டமைப்பையும் தன்னகத்தே கொண்டு சீரான இயங்கு தளத்தில் இயங்குகிறது.ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிதானமாக அலட்டிக்கொள்ளாத இந்த நகர்வானது ஏனைய சிறு கட்சிகளுக்கு பெரும் சவாலாக இருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தெளிந்த நீரோடையாக இயங்கிக் கொண்டிருக்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மக்கள் மத்தியில் தனது நன்மதிப்பை உரிமைப்போராட்டத்திலும் சரி, அபிவிருத்திக்கான செயற்பாடுகளிலும்  சரி தக்கவைத்துக்கொண்டே வந்துள்ளது.
 
கடந்த நல்லாட்சியில் நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் தற்காலிகமாக அமைக்கப்பட்ட அமைச்சரவையில் மிக முக்கியமான பொறுப்புள்ள அமைச்சரான நகர அபிவிருத்தி  மற்றும் நீர் வழங்கல் அமைச்சு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களுக்கு வழங்கப்பட்டது அந்த நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் இதற்க்கு முன்னர் இருந்த நீர் வழங்கல் அமைச்சர்களையும் விடவும் பாரிய அபிவிருத்திப்பணிகளை மேற்கொண்டமையினால், 2015 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதன் பிற்பாடு நகர திட்டமிடல் , நீர் வழங்கல்  அமைச்சு ரவூப் ஹக்கீம் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இது அமைச்சர் ரவூப் ஹக்கீம் மீது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,  பிரதமர் ரணில் விக்கிரம சிங்க ஆகியோர் வைத்திருந்த நம்பிக்கையும் நல்லெண்ணத்தையும்  பிரதிபலிக்கிறது.
 
நாட்டின் எல்லாப்பாகங்களிலும் அது நகரங்களாக இருந்தாலும் சரி அல்லது அடிப்படை வசதிகளற்ற கிராமங்களாக இருந்தாலும் சரி அந்தப்பிரதேசங்களில் உள்ள மக்களுக்கு சுத்தமான குடிநீரினை பெற்றுக்கொடுப்பதில்  அமைச்சர் ரவூப் ஹக்கீமினால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களை பற்றி அண்மையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க விதந்துரைத்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் அமைச்சர் ரவூப் ஹக்கீமினால் திட்டமிடப்பட்டு பொது மக்களின் நலன்கருதி அமைக்கப்பட்ட பாரிய நீர் வழங்கல் திட்டங்கள் மற்றும் நகர திட்டமிடல் திட்டங்கள், நீர் சுத்திகரிப்பு திட்டங்கள், சிறுநீரக பாதிப்புகள் உட்பட  நீரினால் ஏற்படுகின்ற நோய்களை கண்டறிந்து அவற்றுக்கான  நிரந்தர தீர்வினை பெற்றுக் கொடுப்பதற்கான திட்டங்கள் என பல திட்டங்களை உருவாக்கி அதனை அமுல் படுத்துவதில் வெற்றியும் கண்டுள்ளார்.
 
அந்த வகையில் மாகாணங்கள் தோறும் பல நீர் வழங்கல் திட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன.அதில் முக்கியமானதாக  மத்திய மாகாணத்தில் உருவாக்கப்பட்டுள்ள நீர் வழங்கல் கருத்திட்டமான பாரிய தம்புள்ளை நீர் வழங்கல் திட்டத்தையும் குறிப்பிட முடியும் 9593 மில்லியன் ரூபாய்கள் மதிப்பிடப்பட்டுள்ள இந்த திட்டத்த்தின் கீழ் 174.000 பயனாளிகள் பயன்பெறுவார்கள் என உத்தேசிக்கப்பட்டுள்ளது இந்திய எக்சிம் வங்கி இந்த திட்டத்திட்டற்கான நிதியுதவியை கடனாக வழங்கியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் மாத்தளை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களை உள்ளடக்கிய  தம்புள்ளை,கலேவெல, கெக்கிராவ, பளுகஸ்வெவ,பலாகல, மாவட்ட செயலாளர் பிரிவில் வசிக்கின்ற மக்கள்  சுத்தமான குடிநீரினை பெறக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது . மத்திய மாகாணத்துக்கான நீர் வழங்கல் கருத்திட்டமாக இது அமைந்தாலும் வடமத்திய மாகாணத்தின் அனுராதபுர மாவட்டத்தின் பல பிரதேசங்களுக்கும் இத்திட்டத்தின் மூலம் பயன் கிடைப்பது குறிப்பிடத்தக்கது.2012 ஆம் ஆண்டு கடந்த அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டு நிதி மற்றும் பெளதீக வளப்பற்றாக்குறை காரணமாக தொய்வு நிலையில் இருந்த இத்திட்டமானது அமைச்சர் ரவூப் ஹக்கீமினால் மீண்டும் துரிதப் படுத்தப்பட்டு வளப்பற்றாக்குறை  நிவர்த்தி செய்யப்பட்டு  நிறைவடையும் நிலையில் தற்போது உள்ளது  இது வறட்சியான கால நிலையை கொண்ட அனுராதபுரத்தின் எல்லைக் கிராமங்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாகும் .
 
இவ்வாறே மத்தியமாகாணத்தில் கண்டி மாநகரை மையப்படுத்திய கண்டி நகர கழிவு நீர் முகாமைத்திட்டம் மற்றுமொரு முக்கியமான திட்டமாகும் . சூழலுக்கும் சுற்றாடலுக்கும் குந்தகத்தை உண்டு பண்ணுகின்ற கழிவு நீரினை நிலக்கீழ் குழாய்கள் மூலம் வெளியேற்றி நகரத்தை தூய்மையாக வைத்துக்கொள்ளுகின்ற இந்த திட்டமானது கடந்த காலங்களில் முறையாக செயற்படுத்தாமையினால் பல முக்கிய நகரங்கள் அசுத்தமானதாகவே காணப்பட்டது இந்த நிலையிலிருந்து முக்கிய நகரங்களை பாதுகாத்து நகரங்களில் நல்ல சூழலை உருவாக்குவதற்கு இந்தத்திட்டம் உறுதுணையாக அமைந்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் கெந்தகடுவை,பூவெலிக்கடை, அணிவத்தை மேற்கு , அணிவத்தை கிழக்கு,அஸ்கிரிய,பகிரவகந்த,மகியாவை,பூரணவத்த ,ஹீரெஸ்ஸகல,முல்கம்பொல,அம்பிட்டிய ,மல்வத்த,கட்டுகல, இகல கட்டுக்கல, கண்டி நகர், சுகுதும்பொல போன்ற இன்னும் பல பிரதேசங்களை உள்ளடக்கியதாக இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் சுமார் 20,500 பயனாளிகள் பயன் பெறுவார்கள் என உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஜப்பானிய நிறுவனமான ஜெயிக்காவுடன் இணைந்து இதற்கான நிதியினை இத்திட்டத்திற்காக வழங்கியுள்ளது. இதற்கான மொத்த செலவாக 22,588 மில்லியன் ரூபாய்கள் கணக்கிடப்பட்டுள்ளன.
 
இதேபோன்று லக்கல புதியநகர் நீர் வழங்கல் திட்டம் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் நேரடி உத்தரவின் பேரில் உருவாக்கப்பட்ட ஒன்றாகும் லக்கல புதிய நகரை கருத்திற் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த குடிநீர் திட்டத்தின் கீழ் 7400 குடும்பங்கள் பயன்பெறும்  வகையில் அமைக்கப்பட்டுள்ளது . இந்த திட்டத்திற்காக 4,496 மில்லியன் ரூபாய்கள் உத்தேசிக்கப்பட்டுள்ளதோடு இந்த நிதியினை தனியார் வங்கியான ஹட்டன் நெஷனல் வங்கி இலங்கை அரசுக்கு கடனாக வழங்குகின்றது.இவ்வாறே வில்கமுவ குடிநீர் வழங்கல் திட்டமும் அமைந்துள்ளது 39 கிராம சேவகர் பிரிவுகளைக் கொண்ட வில்கமுவ பிரதேசத்திலுள்ள அனைத்து கிராமங்களையும் உள்ளடக்கியதாக இத்திட்டம் அமைந்துள்ளது 3,580 மில்லியன் ரூபாய்கள் உத்தேசிக்கப்பட்டுள்ள இத்திட்டத்திற்கான நிதியினை தேசிய அபிவிருத்தி வங்கி இலங்கை அரசுக்கு கடனாக வழங்கியுள்ளது. இந்த நீர் வழங்கல் திட்டத்தின் மூலம் 5,600 குடும்பங்களுக்கான குடிநீர் இணைப்புக்கள் வழங்கப்படவுள்ளன.
 
இவ்வாறே கிழக்கு மாகாணத்தில் கிழக்கு மாகாண நீர் வழங்கல் அபிவிருத்தி கருத்திட்டம் மற்றும்  அம்பாறை  நீர்  விநியோக வலையமைப்பு ஆகிய திட்டங்கள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு அவை நிறைவு பெறும் தருவாயில் காணப்படுகின்றன இதில் கிழக்கு மாகாண நீர் வழங்கல் அபிவிருத்தி கருத்திட்டத்தின் கீழ் மகாஓயா,தெஹியத்த கண்டிய,உகண, தமன, சம்மாந்துறை, இறக்காமம், பொத்துவில், கல்முனை , நட்பிட்டிமுனை மருதமுனை,கல்லாறு ,கோணேசபுரம்,குடுவில் போன்ற பல பிரதேசங்களை சேர்ந்தவர்கள் பயனடைவார்கள். 6,526 மில்லியன் ரூபாய்கள் நிதி ஒதுக்கீட்டின் மூலம் நிறைவுக்கு வந்திருக்கும் இந்த திட்டத்தின் மூலம் 209,270 பயனாளிகள் பயனடைவார்கள் என உத்தேசிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசோடு இணைந்து ஜப்பானிய  ஜெயிக்கா  நிறுவனம் இந்த திட்டத்திற்கான நிதியினை வழங்குகிறது.இதேபோன்று அம்பாறை  நீர்  விநியோக வலையமைப்பு திட்டத்தின் கீழ் அம்பாறை,மட்டக்களப்பு, மொனராகலை ஆகிய மூன்று மாவட்ட மக்களும் பயன்பெறுகின்ற வகையில் இத்திட்டமானது உருவாக்கப்பட்டுள்ளது இதன் மூலம் மூன்று மாவட்டங்களிலும் 10,000 ஆயிரம்  குடிநீர் இணைப்புக்கள் வழங்கப்படவுள்ளன.இலங்கை வங்கி, தேசிய சேமிப்பு வங்கி, டி.எப்.சி .சி  வங்கி ஆகியவற்றின் நிதிப்பங்களிப்புடன் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்திற்கு 6,848 மில்லியன் ரூபாய்கள் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 
இலங்கையில் மிகவும் வறண்ட பிரதேசமான வடமத்திய மாகாணத்தின் அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை பிரதேசத்திட்டக்கான விசேடமான நீர் வழங்கல் மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைத்தல் போன்ற திட்டங்கள் அமைச்சர் ரவூப் ஹக்கீமினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன அதற்கான மிகமுக்கிய காரணம்  நீரினால் ஏற்படக்கூடிய உயிராப்பத்தை உண்டு பண்ணக்கூடிய நோய்களில் சிறுநீரக  நோய் பிரதானமானது அது அனுராதபுரம்,பொலன்னறுவை பிரதேசங்களில்தான் அதிக சதவிகிதம் காணப்படுகிறது.என்பதாகும். அந்த வகையில் அனுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் செயற்திட்டம்  மிகப்பெரிய நீர் வழங்கல் திட்டமாகும் 115,600 பயனாளிகளை கருத்தில் கொண்டு உருவாக்கப் பட்டிருக்கும் இத்திட்டத்திற்கு 10,247 மில்லியன் ரூபாய்கள் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மதவாச்சி பிரதேசத்திற்கு உட்பட்ட  37 கிராம சேவகர்க பிரிவுகளும், ரம்பேவ பிரதேசத்திற்குற்பட்ட 38 கிராம சேவகர் பிரிவுகளும், மிகிந்தலை பிரதேசத்திற்குட்பட்ட  2 கிராம சேவகர் பிரிவுகளும் இந்த திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்திற்கான முழுமையான நிதியினை ஜப்பானின் ஜெய்க்கா நிறுவனம் இலங்கை அரசுக்கு கடனாக வழங்குகின்றது.
 
இவ்வாறே வடமத்திய மாகாணத்தின் பொலன்னறுவை  மாவட்டத்திற்கான மற்றுமொரு பாரிய நீர் வழங்கல் திட்டமாக மெதிரிகிரிய நீர் வழங்கல் திட்டத்தினை அடையாளப்படுத்த முடியும். மெதிரிகிரிய பிரதேச செயலக பிரிவிலுள்ள 31 கிராமசேவகர் பிரிவுகளை சேர்ந்த பொது மக்கள் இதன் மூலம் குடிநீர் வசதிகளைப் பெறுவார்கள், மொத்தமாக 15.000 குடும்பங்களுக்கான குடிநீர் இணைப்புக்கள் இதன் மூலம் வழங்கப்படவுள்ளன இதற்கான நிதி உதவியினை  இலங்கை வங்கி வழங்குகிறது. இத்திட்டத்திற்கான உத்தேச செலவாக 1.500 மில்லியன்  என கணிக்கப்பட்டுள்ளது, அமைச்சர் ரவூப் ஹக்கீமின் நேரடிப்பணிப்பின் கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த வேலைத்திட்டமானது 2018 ஜூலையில் நிறைவுபெறுமென எதிர்பார்க்கப்படுகிறது.
 
இதனைப்போன்று வடமேல் மாகாணத்தின் குருநாகல் மாவட்டத்திற்கான  குருநாகல்  பாரிய குடிநீர் வழங்கல் திட்டம் மற்றும் மல வடிகாலமைப்பு திட்டம் மிக முக்கியமான ஒன்றாகும்.இந்த திட்டத்தின் மூலம் குருநாகல் மற்றும் மல்லவப்பிட்டிய பிரதேச செயலகப்பிரிவினைச்  சேர்ந்த 73.000 பயனாளிகள் குடிநீர் இணைப்பினை பெறுவார்கள்.  இவ்வாறே இதே பிரதேசத்தை சேர்ந்த 43.000 ஆயிரம் பேர் பயன்பெறும் வகையில் துப்பரவேற்பாட்டு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.சீன எக்சிம் வங்கியின் நிதியுதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த வேலைத்திட்டத்திற்கு 13,248 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதே போன்று கண்டி மற்றும் குருநாகல் மாவட்டத்தின் பகுதிகளை இணைத்து மக்கள் பயன் பெறுகின்ற வகையில் அமைக்கப்பட்ட திட்டமாக கலகெதர -மாவத்தகம நீர்வழங்கல் திட்டமாகும். மாவத்தகம, மல்லவப்பிட்டிய பிரதேச செயலகங்களைச் சேர்ந்த 19000 பயனாளர்களுக்கு இந்தத்திட்டத்தின் மூலம் குடிநீரினை வழங்குவதோடு கலகெதர நீர் வழங்கல் திட்டத்திற்கு 2000 கண மீற்றர் நீரினை வழங்குதல் இந்த திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.இந்த திட்டத்தின் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
 
அடுத்து சப்ரகமுவ மாகாணத்தில் பல குடிநீர் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு பணிகள் வேகமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இதில்  இரத்தினபுரி மாவட்டத்தில் பாரிய இரத்தினபுரி நீர் வழங்கல் திட்டம் முக்கியமானதாகும்.இரத்தினபுரி மாவட்டத்தில் இரத்தினபுரி, குருவிட்ட, மற்றும் பெல்மடுல்ல போன்ற பிரதேச செயலகப் பிரிவை சேர்ந்த 43 கிராம சேவகர்கள் பிரிவை உள்ளடக்கிய மக்கள் இதன் மூலம் பயனடைவார்கள். ஸ்பெயின் மற்றும் இலங்கை அரசாங்கங்களின் நிதியுதவியுடன் ஆரம்பிக்கப்பட்டு நிறைவடைந்திருக்கும்  இந்த திட்டத்தின் மூலம் 80,000 ஆயிரம் பயனாளிகள் பயனடைவார்கள் இதற்கான மொத்தமாக 5,136 மில்லியன் ரூபாய்கள் நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. இதே போன்று கொலன்ன பலாங்கொடை குடிநீர் வழங்கல் திட்டமும் மிக முக்கியமான ஒன்றாகும் பலாங்கொடை,கொலன்ன, எம்பிலிபிட்டிய  இம்புல்பே  ஆகிய பிரதேச சபைகளின் கீழ் வசிக்கின்ற சுமார் 80,000 மக்கள் இந்த திட்டத்தின் மூலம் பயன் பெறுவார்கள் 4,658 மில்லியன் ரூபா செலவினை உத்தேசமாக கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டத்திற்கான நிதியுதவியினை பெல்ஜியம் மக்கள் வங்கியுடன் இணைந்து இலங்கை அரசாங்கம் என்பன வழங்கியுள்ளன.
 

இவ்வாறே தென்மாகாணத்தில் ருஹுணுபுர நீர் வழங்கல் திட்டமும் மிக முக்கியமான திட்டமாகும்  அம்பாந்தோட்டை,மாத்தறை மாவட்டங்களை சேர்ந்த சூரியவெவ,அம்பாந்தோட்டை, மாத்தறை, ரிதியகம  பிரதேசங்களை சேர்ந்த 40,000 பயனாளர்கள் இந்த திட்டத்தின் மூலம் பயனடைவார்கள் கொமர்ஷியல் வங்கியின் நிதியுதவியுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள இத்திட்டத்திற்கான மொத்த நிதித்தேவையாக 1,693 மில்லியன் ரூபாய்கள் உத்தேசிக்கப்பட்டுள்ளது. 90 வீதம் நிறைவடைந்துள்ள இத்திட்டத்தின் மூலம் மக்கள் விரைவில் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறே பெந்தோட்டை நீர் வளங்கள் திட்டத்தின் மூலம் இந்த பிரதேசத்திலுள்ள 22 கிராம சேவகர்கள் பிரிவினைச் சேர்ந்த சுமார் 18.000 பயனாளிகள் பயன்பெறுவார்கள். 1000 மில்லியன் ரூபாய்கள் உத்தேசிக்கப்பட்டுள்ள இந்த திட்டத்திற்கான நிதியினை இலங்கை தேசிய சேமிப்பு வங்கி வழங்குகிறது.

இதேபோன்று வடமாகாணத்தில்  யாழ்ப்பாணம் கிளிநொச்சி ,நீர் வழங்கல் திட்டம் மற்றும் துப்பரவேற்பாட்டு செயற்திட்டம் 18,328 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் ஆரம்பிக்கப்பட்டு தற்போது 32 வீதம் நிறைவுபெற்றநிலையில் தொடர்கிறது. இதன் மூலம் வடமாகாணத்தைச் சேர்ந்த 300.000 பயனாளர்கள் பயன்பெறுவார்கள் அதோடு 55,000 பயனாளர்கள் துப்பரவேற்பாட்டு வசதியினை பெறுவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.இதேபோன்று கிளிநொச்சி நீர் வழங்கல் புணருத்தாபனத் திட்டம் இதன் மூலம் 40,000 ஆயிரம் பயனாளிகள் பயன்பெறுவார்கள் தற்போது இத்திட்டத்தின் கீழ் சுமார் 6000 பயன்பெறுகின்றார்கள்.1,900 மில்லியன் ரூபாய்கள் நிதி ஒதுக்கீட்டில் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்திக்கான நிதியுதவியை ஜெயிக்க நிறுவனமும் இலங்கை அரசும் வழங்குகின்றன.

 
இவ்வாறே ஊவா மாகாணத்தில் மஹிங்கனை நீர் வழங்கல்  விரிவாக்கல் திட்டம் மஹியங்கன பிரதேச செயலகம் மற்றும் றெதிமல்லியத்த பிரதேச செயலகங்களை சேர்ந்த 50,000 ஆயிரம் பயனாளிகளை இந்த திட்டத்தின் கீழ் பயனடைவார்கள் . இவ்வாறே  ,பதுளை,ஹாலிஎல,எல்லே ஒருங்கிணைப்பு  நீர் வழங்கல் திட்டத்தின் மூலம் பதுளை,ஹாலிஎல மற்றும் எல்லே பிரதேச செயலகங்களை சேர்ந்த 110.000 பயனாளிகள் பயன் பெறுவார்கள் என உத்தேசிக்கப்பட்டுள்ளது.இது மாத்திரமின்றி மொனராகலை ,புத்தல ஒருங்கிணைந்த நீர் வழங்கல் திட்டம்,கதிகாமம் புனிதநகர் மல வடிகாலமைப்பு உட்கட்டமைப்பு அபிவிருத்தித்திட்டம், என்பன சுமார் 100,000 பயனாளிகள் பயன்பெறுகின்ற திட்டங்களாகும்.
 
இதுபோன்றே மேல்மாகாணத்தில் லபுகம கலட்டுவாவ நீர் சுத்திகரிப்பு திட்டத்தை புனரமைத்தல் , பாரிய கொழும்பு நீர் மற்றும் கழிவு நீர் முகாமைத்துவ மேம்பாட்டு முதலீட்டு திட்டம் , களுகங்கை நீர் வழங்கல் செயற்திட்டம், பாரிய கொழும்பு  நீர் புனருத்தாபன திட்டம், பாரிய கொழும்பு கழிவுநீர்   நீர் புனருத்தாபன திட்டம், இரத்மலானை மொரட்டுவ மற்றும் ஜாஎல -ஏக்கல கழிவுநீர் வெளியேற்றல் திட்டம் , கொழும்பு நகர நீர் வழங்கல் மேம்பாட்டுத்திட்டம் கொழும்பு கிழக்கு நீர்வழங்கல் திட்டம் ,  என்பன மேல்மாகாணத்திலுள்ள பல இலட்சம் பயனாளிகள்  நன்மை பெறுகின்ற  திட்டங்களாகும். இதனைப்போன்றே  வறல் வலய நகர நீர் வழங்கல் மற்றும் துப்பரவேற்பாட்டுத்திட்டமானது வவுனியா , மன்னார், சிலாபம் ,புத்தளம்  பிரதேசங்களை உள்ளடக்கிய 418,285 பயனாளர்கள் பயனடையக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ள திட்டமாகும் இத்திட்டமானது 83.89 சதவிகிதம் நிறைவுக்கு வந்துள்ளது .
 
இவ்வாறு நாடளாவிய ரீதியில் இன்னும் பல புதிய நீர்வழங்கல் திட்டங்கள், நீர் சுத்திகரிப்புத்திட்டங்கள், கழிவு துப்பரவேற்பாட்டு திட்டங்கள் வடிகாலமைப்பு திட்டங்கள், குறிப்பாக சிறுநீர் பாதிப்புக்குட்பட்டவர்களுக்கான நிவாரண நீர்வழங்கல் மற்றும் நீர் சுத்திகரிப்பு திட்டங்கள்  என அநேக  திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.  இவை யாவும் மக்களுக்கு நேரடித்தொடர்புடையவையாகும் ,சுத்தமான குடிநீருக்காக மக்கள் ஏங்கித்தவிக்கின்ற சூழ்நிலையில் அவற்றை நிவர்த்தி செய்ய அமைச்சர் ரவூப் ஹக்கீம்  அரும்பாடுபடுகின்றார். நேரடியாக இலங்கைமுழுதுக்கும் தனது அபிவிருத்தி வேலைகளை முன்னெடுத்துவிட்டு விளம்பரப்படுத்திக்  கொள்ளாமல்  அமைதியாக நடைபயில்கிறார்  அமைச்சர் ரவூப் ஹக்கீம்.
 
நாச்சியாதீவு பர்வீன்-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM