இலங்கை வாழ் முஸ்லிம்களின் இரத்தத்திலும் கண்ணீரிலும் அவர்களின் பெறுமதியான இழப்புக்களிலும் வேர் விட்டு விருட்சமான இந்த இயக்கத்தினைச் சிதைப்பதற்கும் இதனைக் கேலிப் பொருளாக்குவதற்கும் எந்தக் கொம்பனுக்கும் அருகதை கிடையாது.

என்னைப் பொருத்தவரை இந்த இயக்கத்தினை சீரமைத்து கடந்த கால தவறுகளிலிருந்தும் பெற்ற பாடங்களில் இருந்தும் படிப்பினைகளைப் பெற்று இந்த இயக்கத்தினை மீளவும் கொண்டு செல்வதற்கான உணர்வு பூர்வமானதும் அறிவு பூர்வமானதுமான நடவடிக்கைகளை விடுத்து இந்த இயக்கத்தினைக் கேலிப் பொருளாக்க யார் நினைத்தாலும் அல்லாஹ்வின் கோபப்பார்வையில் இருந்து தப்பிக்க முடியாது என்று நான் கருதுகின்றேன்.

கட்சிக்குள் இன்று எழுந்திருக்கின்ற பூதாகாரப் பிரச்சினைகளுக்கு உபாய ரீதியாக அல்லாமல் புரிந்துணர்வுடனும் பரஸ்பர விட்டுக் கொடுப்புடனும் தீர்வுகள் காணப்படுவதே சாலச் சிறந்ததாகும்.

கட்சிக்குள் இன்று எழுந்திருக்கின்ற சலசலப்புக்களைப் பார்க்கின்ற போது மனதுக்கு பெரும் கவலையாக இருக்கின்றது. ஒருகாலத்தில் உரிமைப்போராட்ட ஆயுதமாக இருந்த இயக்கம் இன்று கேவலமான சர்ச்சைகளில் சிக்கியிருப்பதை நினைத்து பெரிதும் வேதனைப் படுகின்றேன்.

ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசை அழிப்பதற்குக் கங்கணம் கட்டிக் கொண்டு அலைகின்ற சக்திகளுக்கு இன்று நமது கட்சி காலம் அமைத்துக் கொடுத்தது போல் நடந்து கொண்டிருக்கின்ற செயற்பாடுகள் கண்டிக்கத் தக்கது.

இன்று முஸ்லீம் காங்கிரசை அழித்து விட ஆசை கொண்டு அறிக்கை விடுபவர்களும் முக நூல்களில் எழுதுபவர்களும் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் தங்களது முகத்தில் தாங்களே காறித்துப்புவது போன்ற செயல் ஒன்றயே செய்து கொண்டிருக்கின்றனர்.

இந்த இயக்கம் வாழ வேண்டும். இது ஒன்றே முஸ்லீம் சமூகத்துக்கான விமோசனம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM