சப்னி அஹமட், நுஸ்கி அஹமட்

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனைக்கு கீழ் கிழக்கு மாகாணசுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்களைமக்களிடம் கையளிப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று(07.07.2017) மட்டக்களப்பில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது கடந்த வருடம் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சினால்மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாகவும், அதனைமக்கள் பாவனைக்க கையளிப்பது தொடர்பாக ஆராய்ப்பட்டதுகுறிப்பாக வாழைச்சேனைகாத்தான்குடிமீராவோடை ஆகியபிரதேசங்களில் உள்ள வைத்தியசலை அபிவிருத்திகளை எதிர்வரும்13ஆம் திகதி திறந்து வைப்பதற்கும் நடவடிககை எடுக்கப்பட்டதாககிழக்கு மாகாண சுகாதர அமைச்சர் .எல்முஹம்மட் நஸீர் தெரிவித்தார்.

மேலும், திறந்து வைக்கப்படவுள்ள அபிவிருத்திகளில் உள்ளகுறைபாடுகள் தொடர்பாக ஆராய்யப்பட்டு அதற்கான தீர்வுகளும்மேற்கொள்ளப்பட்டது. இதன் போது, கிழக்கு மாகாண சுகாதாரஅமைச்சின் செயலாளர், உதவிச்செயலாளர், மாகாணப்பணிப்பாளர், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பாணிப்பாளர், கிழக்கு மாகாணமுதலமைச்சரின் இணைப்புச் செயலாளர், வைத்திய அத்தியட்சகர்கள், திட்டமிடல் பிரிவு போன்ற உயர் அதிகார்கள் கலந்து கொண்டனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM