சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவில் நீண்டகாலமாகக் காணி அனுமதிப்பத்திரமின்றி வசித்து வருகின்ற 205 தமிழ் மற்றும் முஸ்லிம் குடும்பங்களுக்கு காணி அனுமதிப்பத்திரம் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று(10) திங்கட்கிழமை சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் எஸ்.எம்.எம். ஹனீபா தலைமையில் இடம்பெற்றது.
பிரதம அதிதியாக கலந்து கொண்ட திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் குடும்ப அங்கத்தவர்களுக்கு காணி அனுமதிப்பத்திரனை வழங்கி வைத்தார்.


இதில் மாகாண உதவிக்காணி ஆணையாளர் திருமதி தர்சன குணவர்த்தன, மாவட்ட காணி உத்தியோகத;தர் எம்.ஐ. முஸம்மில், சிரேஷ்ட நில அளவை அத்தியேட்சகர் எம்.றபீக் உட்பட பலர் கலந்து கொண்டிந்தனர்.


பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூரின் அயராத முயர்ச்சியின் பலனாக இக்குடும்பங்களுக்கு காணி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM