Web
Analytics
30வது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் கலந்து கொள்ளும் அம்பாறை உதைப்பந்தாட்ட அணிக்கு ரஹ்மத் மன்சூர் சீருடை வழங்கிவைப்பு - Sri Lanka Muslim Congress

அண்மையில் பதுளையில் நடைபெற்ற 30 வது இளைஞர் விளையாட்டு போட்டியில் அம்பாறை மாவட்டம் சார்பாக கல்முனை பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய இளைஞர் உதைப்பந்தாட்ட அணி இறுதிப்போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த உதைப்பந்தாட்ட போட்டியின் இறுதிப்போட்டி எதிர்வரும் 26ம் திகதி மாத்தறையில் நடைபெற இருக்கின்றது. இந்த இறுதிப்போட்டியில் கலந்து கொள்ளும் அம்பாறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அணியினர் இன்று(24) கல்முனை மாநகரசபை உறுப்பினர் ரஹ்மத் மன்சூரிடம் விடுத்த வேண்டுகோளுக்கினங்கே அவர்களுக்கான சீருடையினை தனது சொந்த நிதியிலிருந்து உரியவர்களுக்கு இன்று அவரது உத்தியோகபூர்வ அலுவலகத்தில் வைத்து வழங்கிவைத்தார்.

இறுதிப்போட்டிக்கு தெரிவு செய்யப்பட்ட அணியினருக்கு கல்முனை மாநகரசபை உறுப்பினர் ரஹ்மத் மன்சூர் அவர்கள் வாழ்த்துக்களையும்,பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM