பதுள்ளை   மாவட்டம்   மஹியங்கனை  நாகதீப பிரதேசத்தில் 312 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் கிராமிய நீர் வழங்கல் திட்டத்தின் ஆரம்பகட்டப் பணிகள் ஞாயிற்றுக்கிழமை (22)  நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால்  உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது 

 
இந்தத்  திட்டத்தின் கீழ் இப்பிரதேசத்திலுள்ள  ஹீரஸ்ஸகொட , நாகதீப , பட்டியகெதர, மகபிட்டிய மற்றும் பக்கினிதண்டுகொல்ல போன்ற ஐந்து கிராமங்களை உள்ளடக்கிய   மொத்தமாக 312 குடும்பங்களை சேர்ந்த 1013 பயனாளிகள்  பயன் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
கிராமிய நீர் வழங்கல் திட்டத்தின் கீழ் அமைக்கப்படவிருக்கும் இந்த நீர் வழங்கல் திட்டத்திற்கு 44 மில்லியன் ரூபாய்கள் மதிப்பிடப்பட்டுள்ளது 
 
 இதன் மூலம்  நீண்ட காலமாக இந்தப்பிரதேசத்தில் நிலவிவந்த அத்தியவசிய தேவையான குடிநீர் பிரச்சினைக்கான தீர்வு வழங்கப்பட்டுள்ளதாக கிராமத்து மக்கள் தெரிவித்தனர் 
 
இந்த நிகழ்வில் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா , லட்சுமன் செனவிரத்ன மற்றும் தேசிய நீர்வழங்கல் அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் கே.ஏ .அன்சார் உட்பட அரச அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM