Web
Analytics
360 வெளிநாட்டு போட்டியாளர்கள் கலந்து கொள்ளும் விளையாட்டு நிகழ்வு தொடர்பான கலந்துரையாடல் - Sri Lanka Muslim Congress

கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகமும் கோனேஸியன் ரீ-செலான் நிறுவனமும் இணைந்து பாசிக்குடா – மட்டக்களப்பு ஆகிய இடங்களில் நடாத்தவுள்ள 360 வெளிநாட்டு போட்டியாளர்கள் கலந்து கொள்ளும் விளையாட்டு நிகழ்வு (Raid Amazones – 2018) எதிர்வரும் 11.10.2018 – 19.10.2018 வரை நடைபெற உள்ளது .

இதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட கலந்துரையாடல் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை கிழக்கு மாகாண ஆளுநரின் ஆலோசனையில் தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் பிரதியமைச்சர் அலி சாஹிர் மௌலானா அவர்களின் தலைமையில் பாசிக்குடா மாலு மாலு ஹோட்டல் மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர், மாகாணக் கல்விப் பணிப்பாளர், மட்டக்களப்பு பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர், உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், பிரதேச செயலாளர்கள், உள்ளுராட்சிமன்றங்களின் செயலாளர்கள் உட்பட அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM