ழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின் முழு முயற்சியால் பல  கோடி ரூபா பெறுமதியான சுகாதாரத் துறைசார் அபிவிருத்தித் திட்டங்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டன.

இதன் போது வாழைச்சேனை ஆதாரவைத்தியசாலையில் கிழக்குமாகாண கௌரவ   முதலமைச்சர்ஹாபிஸ்நசீர்அஹமட் அவர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூபா 21 மில்லியன் குறித்தொதுக்கப்பட்ட மாகாண நன்கொடை நிதியின் மூலமாக நிர்மாணிக்கப்பட்ட மருந்துக்களஞ்சியம், மருத்துவ_ஆய்வுகூடம் ஆகியவற்றினை உள்ளடக்கிய வைத்தியசாலைக் கட்டடம் இன்று (13.07.2017 / வியாழக்கிழமை) கௌரவ முதலமைச்சரால் உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.

 

அத்துடன் கோறளைப்பற்றுமத்தி சுகாதாரவைத்திய அதிகாரிஅலுவலகத்தின் புதிய கட்டிடத்தினை கிழக்குமாகாணத்தின் கௌரவ  முதலமைச்சர் ஹாபிஸ்நசீர்அஹமட் இன்று  திறந்துவைத்தார்.

கிழக்குமாகாண குறித்தொதுக்கப்பட்ட நன்கொடை நிதியிலிருந்து 20 மில்லியன் ரூபாய்களை முதலமைச்சர் இக்கட்டிட நிர்மாணத்துக்காக ஒதுக்கீடு செய்திருந்தார்.

அத்துடன் கிழக்கு மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியொதுக்கீட்டின் மூலமாக  5.4 மில்லியன் ரூபாசெலவில் ஓட்டமாவடி  மீராவோடை  பிரதேச வைத்தியசாலையில்   நிர்மாணிக்கப்பட்ட அவசரசிகிச்சைப் பிரிவு(ETU) கட்டடமும்  கிழக்கு மாகாண முதலமைச்சரால் இன்று  திறந்து வைக்கப்பட்டமை  குறிப்பிடத்தக்கது.

 

இந்த நிகழ்வுகளில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ எல் எம் நசீர் உட்பட கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் பல அரச அதிகாரிகளும்  கலந்து கொண்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM