வெலம்பொட, லியங்கஹவத்த பிரதேச மக்களின் நீண்டநாள் பிரச்சினையாக இருந்த சுத்தமான குடிநீர் தேவையை நிவர்த்திக்கும் வகையில், சமூக நீர் வழங்கல் திட்டத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று சனிக்கிழமை (25) மக்களின் பாவனைக்காக திறந்து வைத்தார்.
6 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் மூலம் சுமார் 250 குடும்பங்கள் சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொள்ள முடியும்.
பாராளுமன்ற உறுப்பினர் லக்கி ஜயவர்தன, அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் எம். நயீமுல்லாஹ், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் தலைவர் கே.ஏ. அன்ஸார், உடுநுவர பிரதேச சபையின் முன்னாள் உப தலைவர் ரஸிக் ஜலால்தீன் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.