(எம்.சி. அன்சார்)

எதிர்வருகின்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலிலே முஸ்லிம் மக்கள் அனைவரும் முஸ்லிம் காங்கிரஸோடுதான் இருகின்றார்கள் என்ற செய்தியை அரசாங்கத்திற்கும், சர்வதேசத்திற்கும் உரத்துச் சொல்ல வேண்டும். அதற்கு எல்லோரும் முஸ்லிம் காங்கிரஸின் வெற்றியின் பங்காளிகளாக மாற வேண்டும். என திகாமடுல்ல மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்  எம்ஐ.எம். மன்சூர் தெரிவித்தார்.

சம்மாந்துறை பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச்சின்னத்தில் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் விளினையடி வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளர் சட்டத்தரணி எம்.எம்.சகுபீரின் வட்டாரக்கிளை திறப்பு விழா மற்றும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான கலந்துரையாடல் சம்மாந்துறை விளினையடியில் வேட்பாளர் சட்டத்தரணி எம்.எம்.சகுபீர் தலைமையில்  நேற்று(01)  இடம்பெற்றது. அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தம் உரையாற்றுகையிலே – இலங்கையில் முஸ்லிம்களுக்கு இருக்கின்ற கட்சி முஸ்லிம் காங்கிரஸ்தான், உலகம் அறிந்த முஸ்லிம் தலைவராக ரவூப் ஹக்கீம் மாத்திரம்தான் அந்த தகுதி வேறு எவருக்கும் கிடையாது.

தேசிய காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளில் முஸ்லிம்களுக்கென்று எந்த அடையாளமும் கிடையாது. அதாவுல்லா, ரிஷாத் பதியுதீன் போன்ற தலைமைகள் தேசிய மட்டத்தில் பெரும்பான்மை தலைவர்களுடன் நண்பர்களாக காட்டிக் கொண்டும், முஸ்லிம்களுக்கு மத்தியில் நாங்கள்தான் உண்மையான தலைவர்கள் என அடையாளப்படுத்திக் கொண்டு துரோகத்தனமான அரசியலை செய்கின்றவர்களுக்கு பின்னால் முஸ்லிம் சமூகம் ஒருபோதும் செல்ல முடியாது.

முஸ்லிம்களின் பேரியக்கமான ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மூலம் அரசியல் முகவரியையும், அடையாளத்தையும் பெற்றுக் கொண்டவர்கள்தான் இப்போது இக்கட்சிக்கெதிரான முகாம்களில் முகாம்களில் இருந்து கொண்டு கட்சியை பலவீனப்படுத்துகின்ற துரோகத்தனமான அரசியலையும், மாமூலமான அரசியலையும் செய்கின்றவர்களுக்கு எதிராகத்ததான் மிக நேர்மையாக முஸ்லிம் காங்கிரஸ் தனது அரசியலை செய்ய வேண்டியுள்ளது.

எனவே, இத்தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் வகுத்துள்ள வியுகத்தின் படி ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச்சின்னத்தில் போட்டியிடுகின்றது பெரும்பான்மை மக்களின் ஆதரவுடன் சம்மாந்துறை பிரதேச சபையின் ஆட்சி ஆதிகாரத்தினை கைப்பற்ற சம்மாந்துறை மக்கள் அனைவரும் சகல பேதங்களையும் மறந்து யானைச்சின்னத்திற்கு வாக்களித்து அனைத்து வட்டாரங்களையும் வெற்றிபெறச் செய்ய வேண்டும். என்றார்.

இதில் வேட்பாளர்கள், கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்கள். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM