Web
Analytics
பாலமுனை ஹோமியோபதி வைத்தியசாலைக்கு புதிய கட்டிடதிற்காக 15 மில்லியன் ருபாய் நிதி ஒதுக்கீடு - Sri Lanka Muslim Congress

பாலமுனை ஹோமியோபதி வைத்தியசாலைக்கு நேற்று (12/05/2018) ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும்

அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ பிரதி அமைச்சருமாகிய கெளரவ பைசால் காசிம் விசேட விஜயத்தினை மேற்கொண்டார்.

இதன்போது இவ்வைத்தியசாலையின் குறைகளை கேட்டறிந்ததுடன் அக்குறைகளை நிவர்த்தி செய்வதற்கான அவசர நடவடிக்கைகளை தாம் மேற்கொள்வதாகவும் தெரிவித்தார் .

இவ் வைத்தியசாலைக்கான நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடதிற்காக 15 மில்லியன் ருபாய் நிதி ஓதுக்கப்பட்டுள்ளது.
அபிவிருத்திக்காக ஒரு ஏக்கர் காணியும் அட்டாளைச்சேனை பிரதேச செயளாலர் கெளரவ அதிசயராஜ் அவர்களினால் வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்…!

இந்நிகழ்வில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உறுப்பினரும் அதிபருமான தேசமானி S.M.M. ஹனிபா JP அவர்களோடு பாலமுனை ஸ்ரீ லாங்கா முஸ்லிம் காங்கிரசின் அமைப்பாளர் Alm. அலியார், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் AL. அமானுல்லாஹ், அட்டாளைச்சேனை பிரதேச செயளாலர் அதிசயராஜ், MSM. அம்ஜத் அஷ்கரி, ஜும்மா பள்ளித் தலைவர் மற்றும் ஹோமியபதின் கௌரவ வைத்திய அதிகாரி, பாலமுனை மத்திய குழு, பொதுமக்கள் என எல்லோரும் கலந்து கொண்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM