ஜனாதிபதி ராஜபக்ஷ பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் புதிய கட்டடத் தொகுதியை திறந்து வைத்தார்
Published on: May 13, 2013 @ 7:49
சட்டத்தின் ஆட்சிக்கு அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் சேவை இன்றியமையாதது என நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெள்ளிக்கிழமை (10) முற்பகல், பத்தரமுல்லை, பெலவத்தையில் அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் புதிய கட்டடத் தொகுதியை திறந்து வைத்த நிகழ்வில் உரையாற்றும் போதே அமைச்சர் ஹக்கீம் இதனைக் கூறினார்.
முல்லைத்தீவு பிரதேசத்தில் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு இடையில் நல்லிணக்கம்
Published on: May 13, 2013 @ 7:36
முல்லைத்தீவு பிரதேசத்தில் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு இடையில் படிப்படியாக கட்டியெழுப்பப்பட்டு வந்துள்ள நல்லிணக்கம், நல்லுறவு, என்பன பாதிக்கப்பட்டு அதனால் இனமுறுகல் ஏற்படாதவிதத்தில் இரு தரப்பினரும் எதிர்நோக்கும் காணி விவகாரம் உள்ளிட்ட சகல பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வுகளைக் காண நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய அவசியத்தை நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் வலியுறுத்தினார்.
சவூதி அரேமபியாவுக்கு புதிய தூதுவராக வடிவேல் கிருஷ்ணமூர்த்தி
Published on: May 13, 2013 @ 6:58
சவூதி அரேமபியாவுக்கு இலங்கையின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வடிவேல் கிருஷ்ணமூர்த்தி நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமை புதன்கிழமை (8) பிற்பகல் நீதியமைச்சில் சந்தித்து கலந்துரையாடினார்.
நீதி அமைச்சினால் இலங்கையில் நிறுவுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள சர்வதேச நடுத்தீர்ப்பு மையம்
Published on: May 13, 2013 @ 6:43
நீதி அமைச்சினால் இலங்கையில் நிறுவுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள சர்வதேச நடுத்தீர்ப்பு மையம் தொடர்பில் ஒரு வர்த்தக திட்டத்தை வகுப்பதற்கு உலக வங்கியால் ஆலோசகராக கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ள கிரஹம் மெர்ஸி, அதன் செயலாக்க சாத்தியக்கூறுகள் பற்றி அமைச்சர் ஹக்கீமிடம் விளக்கிக் கூறினார்.
தந்தை செல்வா சதுக்கத்தில் நிகழ்த்திய தந்தை செல்வாவின் 36 ஆவது நினைவுப் பேருரை
Published on: May 8, 2013 @ 10:29
இற்றைக்கு 15 ஆண்டுகளுக்கு முன் 1997 ஆம் வருடம் மார்ச் மாதம் 30 ஆம் திகதியன்று கொழும்பு புதிய கதிரேசன் மண்டபத்தில் நடைபெற்ற தந்தை செல்வாவின் நினைவு நிகழ்வில் எமது மறைந்த தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம் அஷ்ரப் அவர்களை உரையாற்ற அழைத்திருந்த பொழுது, அவருக்கு அன்றைய தினம் சமூகமளிக்க முடியாத காரணத்தினால், அவருக்குப் பதிலாக உரையாற்றுவதற்கு நான் நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தேன்.
முள்ளியவளையில் நீதியமைச்சர் ஹக்கீம
Published on: May 8, 2013 @ 10:20
முள்ளியவளையில் ஏற்பட்டுள்ள காணிப்பிரச்சினைக்கு எந்தவொரு சமூகத்திற்கும் பாதிப்பில்லாத வகையில் சுமூகமாகவும் இணக்கமாகவும் தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நீதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
வடக்கில் ஜனநாயகத்துக்கேற்ப தேர்தல் நடாத்தப்பட வேண்டும் வவுனியாவில் நீதி அமைச்சர் ஹக்கீம்
Published on: May 7, 2013 @ 10:36
வடக்கில் தேர்தலை பின்போடாது ஜனநாயகத்திற்கு அமைய நடத்த வேண்டுமென வவுனியாவில் ஞாயிற்றுகிழமை (05) நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களுடனான சந்திப்பில் கட்சியின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார் .
ஒரு வாரத்திற்கும் மேலாக நடாத்தி வந்த ஆர்ப்பாட்டம் ரவூப் ஹக்கீமின் தலையீட்டினால் முடிவுக்கு வந்தது
Published on: Apr 30, 2013 @ 10:13
அம்பாறை மாவட்டத்தில், பொத்துவில் அல் கலாம் மகா வித்தியாலயத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு கோரி பெற்றோரும், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினரும் ஒரு வாரத்திற்கும் மேலாக நடாத்தி வந்த ஆர்ப்பாட்டம் நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமின் தலையீட்டினால் திங்கள் கிழமை (29) காலையில் முடிவுக்கு வந்தது.
Vietnam, Sri Lanka elevate judicial bond
Published on: Apr 30, 2013 @ 10:01
Prime Minister Nguyen Tan Dung has affirmed Vietnam’s consistent support of judicial cooperation activities with Sri Lanka. The Government leader made the affirmation at a reception held for visiting Sri Lankan Minister of Justice Rauff Hakeem in Hanoi on April 23.
இலங்கை அமைச்சர் ஹக்கீமும், வியட்நாமிய பௌத்த பிக்குவும் சந்திப்பு
Published on: Apr 26, 2013 @ 10:21
தற்பொழுது வியட்நாமிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம், அங்கு வின்ஹ் புங் பிராந்தியத்தில் உள்ள பௌத்த மடாலயத்தில் அதன் பிரதம பிக்கு டிச் கெயின் நகுயெட் தேரரை சந்தித்து உரையாடினார்.
நீதி சரிவர நிலைநிறுத்தப்படும் போதுதான் அரசாங்கம் நாட்டின் ஸ்திரத்தன்மையை ஒழுங்காகப் பேணிப் பாதுகாக்க முடியும்
Published on: Apr 26, 2013 @ 10:14
நீதி சரிவர நிலைநிறுத்தப்படும் போதுதான் அரசாங்கம் நாட்டின் ஸ்திரத்தன்மையை ஒழுங்காகப் பேணிப் பாதுகாக்க முடியும். இந்த நீதியின் ஆட்சி என்பது சரிவர நிலைநாட்டப்படவிட்டால், நாட்டின் உள்விவகாரங்கள் சீர்கெட்டு விடும் என நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
அணிசேரா கொள்கையின் அடிப்படையில் இலங்கைக்கும் வியாட்நாமுக்கும் இடையில் நல்லுறவு
Published on: Apr 26, 2013 @ 10:00
அணிசேரா கொள்கையின் அடிப்படையில் இலங்கைக்கும் வியாட்நாமுக்கும் இடையில் நல்லுறவு நிலவுவதாகவும் சமூக பொருளாதார அபிவிருத்தி வறுமை ஒழிப்புச் செயற்திட்டங்கள் சட்டத்துறை சீர்திருத்தங்கள் போன்ற துறைகளில் இரு நாடுகளும் சிறப்பாக ஒத்துழைத்து வருவதாகவும் நீதியமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் அங்கு இருதரப்பு புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்ட பின்னர் கருத்துத் தெரிவிக்கும் போது கூறினார்.
Published on: Apr 25, 2013 @ 14:50
ஜெனீவாவில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக கொண்டுவரப்பட்ட மனித உரிமை மீறல் சம்பந்தமான தீர்மானங்கள், இலங்கையை ஐ.நா பொதுச் சபையிலும், பாதுகாப்புச் சபையிலும் சிக்கலுக்கும், இக்கட்டான நிலைமைக்கும் உள்ளாக்கும் நோக்கத்திலேயே கொண்டுவரப்பட்டதாக நீதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் கூறினார்.
சட்ட விரோதமாக வெளிநாடுகளுக்கு ஆட்களைக் கடத்துவது மற்றும் அதனோடு தொடர்பான குற்றச்செயல்களும்
Published on: Apr 19, 2013 @ 11:51
சட்ட விரோதமாக வெளிநாடுகளுக்கு ஆட்களைக் கடத்துவது மற்றும் அதனோடு தொடர்பான குற்றச்செயல்களை முறியடிப்பதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு இலங்கை அரசாங்கம் வழங்கிவரும் ஒத்துழைப்புக்கு அந் நாட்டின் சார்பில் அதன் இலங்கை உயர்ஸ்தானிகர் ரொபின் மூடி, நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமிடம் நன்றி தெரிவித்தார்.
முஸ்லிம்களின் காணிப்பிரச்சினைக்கு உரிய தீர்வு
Published on: Apr 19, 2013 @ 11:11
யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் பொலன்னறுவை – மட்டக்களப்பு மாவட்டங்களின் எல்லைப் புறத்தை அண்டிய முஸ்லிம் குக் கிராமங்களில் இருந்து வெளியேறிய முஸ்லிம்களின் காணிப்பிரச்சினைக்கு உரிய தீர்வுகளை காண்பதற்காக நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமின் பணிப்புரையின் கீழ் அதிகாரிகள் அங்கு சென்று விபரங்களை திரட்டும் பணியில் ஈடுபட்டனர். அத்துடன் அப் பிரதேச மக்களின் குறைபாடுகள் மற்றும் தேவைகள் குறித்தும் அவர்கள் ஆராய்ந்துள்ளனர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் நீதியமைச்சின் காட்சி கூடத்தை அங்கு சம்பிரதாயபூர்வமாக திறந்துவைத்தார்
Published on: Apr 1, 2013 @ 10:36
ஏழாவது ‘தேசத்திற்கு மகுடம்’ கண்காட்சி அம்பாரை நகரில் கோலாகலமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் சனிக்கிழமை (23) ஆரம்பித்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, நீதியமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் நீதியமைச்சின் காட்சி கூடத்தை அங்கு சம்பிரதாயபூர்வமாக திறந்துவைத்தார். கிழக்கு மாகாண சபை அமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமத், மாகாண சபை உறுப்பினர் நசீர் ஆகியோரும் ஏனைய முக்கியஸ்தர்கள் சிலரும் அமைச்சருடன் வருகை தந்தனர். அவர்களை அடுத்து பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரத்னவும் நீதியமைச்சின் காட்சி கூடத்தை பார்வையிட்டார்.
வழக்குத் தாமதங்கள் காரணமாக ஏராளமானோர் உளவியல் தாக்கங்களுக்கும், உடல் சம்பந்தமான நோய்களுக்கும் ஆளாவதாக கண்டறியப்பட்டிருக்கிறது
Published on: Apr 1, 2013 @ 10:08
இவ்வாறு ஏழாவது ‘தேசத்திற்கு மகுடம்’ கண்காட்சியோடு இணைந்ததாக ஞாயிற்றுக்கிழமை (24) அம்பாறை மேல் நீதிமன்றத்தில் நடைபெற்ற அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் பயன்பாடுகள் பற்றிய செயலமர்வில் உரையாற்றும் பொழுதே அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார். சட்டத்தரணிகள் மன்றத்தினர், பொலிஸார் ஆகியோர் பங்குபற்றிய இச் செயலமர்வுக்கு அம்பாறை மாவட்ட நீதிபதி ஏ.எம்.எம். சஹாப்தீன், நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ். பிரிங்கி, நீதியமைச்சின் மேலதிகச் செயலாளர் லக்ஷ்மி குணசேகர ஆகியோரும் முன்னிலை வகித்தனர்.
அமைச்சர் ஹக்கீமுக்கும், யாழ்ப்பாண முஸ்லிம் முக்கியஸ்தர்கள் இடையிலான கலந்துரையாடல்
Published on: Mar 30, 2013 @ 10:51
தேர்தல்களில் முஸ்லிம் கட்சிகள் ஒன்றுபட்டு போட்டியிடும் சாத்தியம் அறவே இல்லாத போதிலும், முஸ்லிம்களின் சமூக நலன் சார்ந்த விடயங்களில் பொதுவான குறைந்தபட்ச செயல்திட்டத்தின் (Common minimal Programme) கீழ் அவை ஒன்றுபட்டு இயங்குவதற்கான சந்தர்ப்பங்களும், வாய்ப்புகளும் இருப்பதாகத் தெரிவித்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம், அதற்கான அழைப்பை தாம் பகிரங்கமாக விடுப்பதோடு, ஏற்கனவே அதுபற்றி முஸ்லிம் அமைச்சர்கள் இருவருடன் கலந்தாலோசித்துள்ளதாகவும் கூறினார். இடம்பெயர்ந்த யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள்குடியேற்ற பிரச்சினையும் அவ்வாறு அணுகுவது பெரிதும் பயனளிக்கும் என தாம் நம்புவதாகவும் அவர் சொன்னார்.
பொதுபல சேனா செயலாளர் பாணந்துறை பொதுக் கூட்டமொன்றில் தெரிவித்த பொய்யான குற்றச்சாட்டு
Published on: Mar 30, 2013 @ 10:34
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் இரண்டு கொள்கலன்களில் ஆயுதங்களை இரகசியமாக அம்பாறைக்கு கொண்டு வந்ததாக பொதுபல சேனா செயலாளர் பாணந்துறை பகிரங்க பொதுக் கூட்டமொன்றில் தெரிவித்த பொய்யான குற்றச்சாட்டு இலங்கை வரலாற்றில் முஸ்லிம்களின் மகோன்னத அரசியல் தலைவராகத் திகழ்ந்த அன்னாரை அவமதிக்கும் செயலென கண்டனம் தெரிவித்துள்ள அக் கட்சியின் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் எந்தவித அடிப்படையோ ஆதாரமோ அற்ற பொய்களையும், அவதூறுகளையும் பெரும்பான்மை மக்கள் மத்தியில் பரப்பி, அவர்களை தவறாக வழிநடாத்த எத்தனிப்பதை அவ்வமைப்பு கைவிட வேண்டும் என்றும் விசனம் தெரிவித்தார்.
முஸ்லிம்களின் சமய, சமூக, கலாசார தனித்துவங்களை தீவிரவாதத்தோடு தொடர்புபடுத்தி நோக்கும்
Published on: Mar 30, 2013 @ 10:14
முஸ்லிம்களின் சமய, சமூக, கலாசார தனித்துவங்களை தீவிரவாதத்தோடு தொடர்புபடுத்தி நோக்கும் பார்வை இப்பொழுது மேலோங்கியுள்ளதாக குறிப்பிட்ட நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம், நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பிருந்தே தமது தனித்துவத்தைப் பேணும் ஆடை அணிகளை முஸ்லிம்கள் அணிந்து வந்துள்ளனர் என்றும் அவ்வாறு அவர்கள் தங்களது தனித்துவத்தை வெளிக்காட்டுவது புதியதல்லவென்றும் தெரிவித்தார்.
பொத்துவில் முஹூது மஹாவிகாரை அமைவிடம் குறித்த பிரச்சினைக்கு தீர்வு காண உதவியதற்கு ஊர் மக்கள் நன்றி தெரிவிப்பு
Published on: Mar 22, 2013 @ 10:16
பொத்துவில் முஹூது மஹாவிகாரை அதன் தற்போதைய அமைவிடத்திலேயே இருக்கும் என்று செவ்வாய்கிழமை (12) அம்பாறை செயலகத்தில் அரச அதிபர் (மாவட்டச் செயலாளர்) நீல் த அல்விஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவையிட்டு அதற்கு ஒத்துழைப்பு நல்கிய நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் மற்றும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோருக்கு அவ்வூர் மக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
நாட்டுக்கு நாடு சட்ட விரோதமாக ஆட்களை கடத்துதல் பாரதூரமான குற்றச்செயல்
Published on: Mar 22, 2013 @ 10:02
சட்ட விரோதமாக ஆட்களை அவுஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளுக்கு கடத்துவது பாரதூரமான செயலென குறிப்பிட்ட நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் நாட்டுக்கு நாடு மேற்கொள்ளப்படும் எத்தகைய ஆட்கடத்தலையும் இலங்கை அரசாங்கம் அறவே சகித்துக்கொள்ளமாட்டாதென்றும் தெரிவித்தார்.
பொத்துவில் விவகாரம் தொடர்பில் அம்பாறை செயலகத்தில் நடைபெற்ற விஷேட கூட்டம்
Published on: Mar 21, 2013 @ 18:34
பொத்துவில் விவகாரம் தொடர்பில் விஷேட கலந்துரையாடலொன்று அம்பாறை செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (12) பிற்பகல் ஒரு மணிக்கு நடைபெற்றது. நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் விடுத்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு தாம் இக் கலந்துரையாடலை ஏற்பாடு செய்ததாக அம்பாறை அரசாங்க அதிபர் நீல் த அல்விஸ் கூட்டத்தின் ஆரம்பத்தில் தெரிவித்தார்.
நீதிமன்ற கட்டடங்களின் நிர்மாணப்பணிகளை துரிதப்படுத்துமாறு நீதியமைச்சர் ஆலோசனை
Published on: Mar 6, 2013 @ 17:33
‘தேசத்திற்கு மகுடம்’ கண்காட்சிக்கு சமாந்தரமாக பொலநறுவையில் திறக்கப்படவுள்ள நீதிமன்ற கட்டடங்களின் நிர்மாணப்பணிகளை துரிதப்படுத்துமாறு நீதியமைச்சர் ஆலோசனை.
நீதி அமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீயை ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகள் சந்திப்பு
Published on: Feb 25, 2013 @ 19:47
உத்தேச ஆசிரிய இடமாற்ற கொள்கை வரைவு காரணமாக இடமாற்ற சபைகளில் சிறுபான்மை சமூகங்கள் சிறிய தொழிற்சங்கங்கள், சிறிய அரசியல் கட்சிகள் சார்ந்த தொழிற்சங்கங்கள் என்பவற்றின் பிரதிநிதித்துவம் இல்லாமல் போகும் ஆபத்து நிலவுவதால் அதனால் ஏற்படக் கூடிய பாதிப்புகளை நீக்குவதற்கு கல்வி அமைச்சுருடன் கலந்துரையாடி உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக நீதி அமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தம்மைச் சந்தித்த ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளிடம் தெரிவித்தார்.
கலாநிதி ஜார்ஜன் மொர்ஹார்ட், நீதியமைச்சர் ஹக்கீம் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு
Published on: Feb 16, 2013 @ 12:09
இஸ்லாம் பற்றிய அச்ச உணர்வு (Islam Phobia) மேலோங்கி இருப்பதுவே நாட்டின் பெரும்பான்மை சமூகத்தவரில் மிகச் சிறிய எண்ணிக்கையிலான குழுவினர் முஸ்லிம் வெறுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான மூல காரணம் எனத் தெரிவித்துள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் வீணான சந்தேகங்கள் களையப்பட வேண்டுமென்றும் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக நோக்கும் குறுகிய பார்வை அகற்றப்பட வேண்டுமென்றும் கூறினார்.
கொழும்பில் நடைபெற்ற இலங்கை காதி நீதவான்களின் வருடாந்த பொதுக்கூட்டம்
Published on: Feb 16, 2013 @ 11:01
ஞாயிற்றுக்கிழமை (10) கொழும்பில் நடைபெற்ற இலங்கை காதி நீதவான்களின் வருடாந்த பொதுக்கூட்டத்தில் உயர் நீதிமன்ற நீதியரசர் சலீம் மர்ஸூப் உரையாற்றும் போது, ஷரிஆச் சட்டம் சில அரபு நாடுகளை விடச் சிறப்பாக இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படுவதாக குறிப்பிட்டதோடு, புனித மக்காவிற்கு ஹஜ் மற்றும் உம்றா கடமைகளை நிறைவேற்றச் செல்லும் முஸ்லிம் பெண்களைப் பொறுத்தவரை அவர்கள் திருமணம்…
இலங்கையில் நடாத்த உத்தேசிக்கப்பட்டுள்ள உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு 2013
Published on: Feb 16, 2013 @ 10:35
இலங்கையில் நடாத்த உத்தேசிக்கப்பட்டுள்ள உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு 2013 தொடர்பில் முக்கிய கலந்துரையாடலொன்று அமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் நீதியமைச்சில் செவ்வாய்க்கிழமை (12) மாலை இடம்பெற்றது.
Hakeem calls for immediate halt to ‘hate campaign’ against Muslims
Published on: January 30, 2013 @ 11:13
The Sri Lanka Muslim Congress (SLMC) yesterday urged the government to take immediate action to stop the hate campaign, launched by some extremist elements in the country, against Muslims.
அமெரிக்கத் தூதுவர் மிசேல் ஜே. சிசோன், அமைச்சர் ஹக்கீமை சந்திப்பு
Published on: Jan 25, 2013 @ 10:40
பிரதம நீதியரசருக்கு குற்றவியல் பிரேரணை மேற்கொள்ளப்பட்ட விதம் குறித்து அமெரிக்கா எதிர்ப்பு தெரிவிக்கின்ற போதிலும், இலங்கையின் சட்டத்துறை சம்பந்தப்பட்ட கருத்திட்டங்களுக்குத் தொடர்ந்தும் ஒத்துழைப்பதாக அந் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் மிசேல் ஜே. சிசோன் நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமிடம் தெரிவித்தார்.
நாட்டில் முஸ்லிம் விரோத நடவடிக்கை இன்னும் கட்டு மீறிச்செல்ல அனுமதித்தால் அது அரசாங்கத்திற்கு நல்லதல்ல
Published on: Jan 23, 2013 @ 20:05
பலமான இந்த அரசாங்கம் ஸ்திரத்தன்மையை இழந்து பலவீனப்படுவதற்கு இடமளிக்க தான் விரும்பவில்லை எனக் குறிப்பிட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் இனவாதத்தை தூண்டுவதன் மூலம் அரசாங்கத்தைப் பலவீனப்படுத்த எத்தனிக்கும் அத்தகைய சக்திகளுக்கு எந்த வெளிச்சக்திகளிடமிருந்து உதவியும் ஒத்தாசையும் கிடைக்கின்றன என்பதை கண்டுகொள்ள முடியாத ஒரு புலனாய்வுத் துறையா இங்கு இருக்கிறது என்றும் கேள்வி எழுப்பினார்.
Statement issued by Rauff Hakeem, MP, Leader of Sri Lanka Muslim Congress and Minister of Justice on the hate campaign against the Muslims
Published on: Jan 23, 2013 @ 18:48
I wish to convey my dismay and displeasure regarding the apathy displayed by the law and order machinery in not containing the spread of the hate campaign at Maharagama in front of a private business enterprise, yesterday. I also categorically condemn the hate campaigns against the Muslims and their business enterprises that are on the rise today in the country.
- ரிசானா நபீக்கின் குடும்பத்திற்கு வீடொன்றை நிர்மாணிப்பதற்கு உதவி
- Rizana Nafeek’s execution in Saudi Arabia
- ரிஸானா மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதை அறிந்து அதிர்ச்சியும், ஆழ்ந்த மன வேதனையும் அடைவதாக தெரிவித்துள்ள ரவூப் ஹக்கீம்
- திவிநெகும சட்டமூல விவாதத்தில் கலந்துகொண்டு ரவூப் ஹக்கீம் ஆற்றிய உரை
- சட்டக்கல்லூரி அனுமதி தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை குறித்து பாராளுமன்றத்தில் ரவூப் ஹக்கீம் சிங்களத்தில் விடுத்த அறிக்கையின் தமிழாக்கம்
- மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரிஸானா நபீக்கின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கருணை
- 123rd Commemoration Oration of Alhaj Dr T B Jayah
- புத்தாண்டின் முதல் சிலநாட்களில் அக்கினிப்பரீட்சை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் 24வது பேராளர் மாநாட்டில் தலைவர் ஹக்கீம்
- T B Jayah Commemoration Lecture
- Minister of Justice met the Head of the judiciary branch of Iran Ayatolla larijani
- Justice Minister met Iran’s Majlis Speaker Ali Larijani
- Sri Lanka Muslim Congress Delegates Conference
- Results of the Law College entrance examination
- சட்டக்கல்லூரிக்கு கூடுதலான முஸ்லிம் மாணவர்கள் தெரிவு
- ஐக்கிய நாடுகளின் நிரந்தர பிரதிநிதிகள் மற்றும் கொலம்பியா பல்கலைக்கழக குழுவினரிடம் கலந்துரையாடல்
- இலங்கை ஈராக் நாடுகளுக்கிடையே கைதிகள் பரிமாற்றத்திற்கு ஏற்பாடு
- இஸ்லாமிய விரோதப் போக்கை தூண்டுவதற்கு தீய சக்திகள் சதி!
- பாகிஸ்தான் கைதிகள் விவகாரம் பற்றி உரிய கவனம் செலுத்தப்படும்
- காலி நகரில் பாரிய நீதிமன்ற கட்டிடத் தொகுதி அமையும் இடத்திற்கு அமைச்சர் ஹக்கீம் வருகை








