T B Jayah Commemoration Lecture
Published on: Jan 1, 2013 @ 15:31
Minister of Justice and Leader, SLMC, Hon Rauff Hakeem will deliver the 123rd T B Jaya Commemoration Lecture at 4.00 pm on January 1, 2013 at 201, Wijewardene Mawatha, Colombo 10. (Muslims Ladies Zonal Education Hall).

The event is organized by the Commemorative Committee of late Alhaj T B Jaya Foundation. Minister Rauff Hakeem will be the Chief Guest at the event. The Governor of the Western Province Hon Alawi Moulana, Senior Minister Hon A H M Fowzie and MP Hon A H M Azwer will be special guests at the event.

The Holy Quran recital of Mr Rifthi Mohammed Rifkan (who won the first place in the international Quran recital competition held in Makkah) is also planned. The pupils of Dr T B Jaya and old boys of Zahira College will be felicitated at the event. The foundation Leader M Ashraff Hussain and Secretary General M Fazal Faleel the will also speak at the event.


கலாநிதி ரி.பி. ஜாயாவின் 123 ஆவது நினைவுச் சொற்பொழிவு
இலங்கையின் சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த கலாநிதி ரி.பி. ஜாயாவின் 123 ஆவது நினைவுச் சொற்பொழிவை நீதியமைச்சரும்,  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் ஜனவரி முதலாம் திகதி மாலை 4.00 மணிக்கு கொழும்பு -10 டீ.ஆர். விஜயவர்தன மாவத்தை, 201 ஆம் இலக்கத்தில் அமைந்துள்ள முஸ்லிம் மகளிர் கல்வி வட்ட மண்டபத்தில் நிகழ்த்துவார்.

கலாநிதி ரி.பி. ஜாயா பவுண்டேஷன் ஏற்பாடு செய்துள்ள இந் நிகழ்வில்  பிரதம அதிதியாக அமைச்சர் ஹக்கீம் கலந்து கொள்ளும் அதேவேளை மேல்மாகாண ஆளுநர் அலவி மௌலான, சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம். பவுசி, பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக பங்குபற்றுவர்.

புனித மக்காவில் நடைபெற்ற சர்வதேச திருக்குர்ஆன் ஓதல் போட்டியில் முதலிடம் பெற்ற இலங்கை காரி ஹாபிஸ் ரிப்தி முஹம்மது ரிப்கானும், மறைந்த கலாநிதி ரி.பி. ஜாயா கொழும்பு ஸாஹிரா கல்லூரியின் அதிபராக பதவி வகித்த காலத்தில் அவரது மாணவர்களாக இருந்த சிலரும் இதன்போது கௌரவிக்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ரி.பி. ஜாயா பவூண்டேஷன் தலைவர் எம்.அஷ்ரப் ஹூஸைன் வரவேற்புரையையும், செயலாளர் நாயகம் எம். பைஸல் பளீல் நன்றி உரையையும் நிகழ்த்துவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM