2012/06/10 ஞாயிற்றுக்கிழமை மூதூர் தாருல் ஜன்னாஹ் வித்தியாலயத்தில் நடைபெற்ற திருகோணமலை மாவட்ட இளைஞர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி செயமர்வு

2012/06/10 ஞாயிற்றுக்கிழமை மூதூர் தாருல் ஜன்னாஹ் வித்தியாலயத்தில் நடைபெற்ற திருகோணமலை மாவட்ட இளைஞர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி செயமர்வுக்கு தலைமை வகித்த கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளருமான ஏ.எம்.ஜெமீல் அவர்கள் ஆற்றிய உரையின் தொகுப்பு;

நீண்ட நாட்களுக்குப் பிறகு இவ்வாறான இளைஞர் பயிற்சிப் பாசறையொன்றை இந்த மண்ணில் பாரிய முயற்சிகளுக்குப் பின்னர் நடாத்துவதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளர் என்ற வகையில் உங்களுடன் சேர்ந்து நானும் பெருமிதம் அடைகின்றேன். அல்ஹம்துலில்லாஹ்! இளைஞர்கள் என்போர் சமூகத்தின் முதுகெழும்புகளாவர். ஆகையினால் இளைஞர்கள் தமது சக்தியை சமூகத்தின் விடிவுக்காக பயன்படுத்த கடமைப்பட்டிருக்கின்றனர். கடந்த காலங்களில் திருமலை மாவட்டத்தில் பல இளைஞர்கள் சமூகத்தினதும் இப்பிரதேசத்தினதும் நலன்களுக்காக சிறப்பாக செயற்பட்டு வந்துள்ளார்கள்.

 

 

இளைஞர்கள் ஒன்றுபட்ட சக்தியாக மாறுவதன் மூலம் சமூக இயக்கத்தை மேலும் பலப்படுத்த முடியும்!

இளைஞர்கள் ஒன்றுபட்ட சக்தியாக மாறுவதன் மூலம் சமூக இயக்கத்தை மேலும் பலப்படுத்த முடியும்!  இளைஞர்கள் ஒன்றுபட்ட சக்தியாக மாறுவதன் மூலம் பிரிந்து செயற்படுகின்ற அரசியல் தலைமைகளை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து முஸ்லிம் சமூக இயக்கத்தை மேலும் பலப்படுத்த முடியும் என் தென்கிழக்கு பல்கலைக்கழக ஸ்தாபக உபவேந்தரும் அரசியல் துறைப் பேராசிரியருமான எம்.எல்.ஏ.காதர் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் இளைஞர் காங்கிரஸ் ஏற்பாட்டில் மூதூர்  தாருல் ஜன்னாஹ் வித்தியாலயத்தில் நடைபெற்ற திருகோணமலை மாவட்ட  இளைஞர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி செயலமர்வில் சிறப்பு
வளவாளராகக்  கலந்து கொணடு உரையாற்றும்போதே பேராசிரியர் எம்.எல்.ஏ.காதர் இவ்வாறு  குறிப்பிட்டார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும்  கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஏ.எம்.ஜெமீல் தலைமையில் இடம்பெற்ற  இந்நிகழ்வில் பேராசிரியர் எம்.எல்.ஏ.காதர் மேலும்
பேசுகையில் கூறியதாவது;

The Latest

More